25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
05 1467703566 6 haircare
தலைமுடி சிகிச்சை

வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

அனைவருக்குமே தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தும் ஷாம்புக்கள் அனைத்தும் கெமிக்கல் அதிகம் கொண்டவை என்பது தெரியும். இருப்பினும் நம் தலைமுடியில் இருக்கும் அழுக்குகளைப் போக்க ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதே என்று நிறைய பேர் ஏதோ ஒரு ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் தலைமுடியின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஷாம்புக்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்புக்களைத் தயாரித்து, அவற்றைக் கொண்டு தலைமுடியை

ஆனால் தலைமுடியின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஷாம்புக்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்புக்களைத் தயாரித்து, அவற்றைக் கொண்டு தலைமுடியை அலசினால், நிச்சயம் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும்.

அதுமட்டுமல்லாமல், நேச்சுரல் ஷாம்புக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களில் உள்ள உட்பொருட்கள் தலைமுடி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சரி, இப்போது வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி பெற உதவும் நேச்சுரல் ஷாம்புக்களை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

ஷாம்பு #1 முட்டை ஷாம்பு * ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தலைமுடியை நீரில் அலசிக் கொண்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, பின் ஷாம்பு பயன்படுத்தாமல், வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை நன்கு அலச வேண்டும்.

* பின் 2 லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, அந்நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

நன்மை இந்த ஷாம்புவால் தலைமுடிக்குத் தேவையான புரோட்டின் கிடைத்து, தலைமுடியின் ஆரோக்கியம், வலிமை மேம்படும். மேலும் இதில் உள்ள அமினோ அமிலங்கள், தலைமுடி பாதிக்கப்படுவதைத் தடுத்து, பொடுகுத் தொல்லையில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

ஷாம்பு #2 பேக்கிங் சோடா ஷாம்பு * 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சுடுநீரில் கலந்து, பின் அதோடு, குளிர்ந்த நீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் ஈரமான தலைமுடியில் அந்த கலவையைக் கொண்டு தலையை மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு 2 லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைமுடியை அலச வேண்டும்.

நன்மை இந்த ஷாம்புவால் ஸ்கால்ப்பில் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, தலைமுடியில் உள்ள அழுக்குகள் முழுமையாக போக்கப்படும்.

ஷாம்பு #3 கடுகு பொடி ஷாம்பு * 1-2 டேபிள் ஸ்பூன் கடுகு பொடியை 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். * எப்போது நீங்கள் உங்கள் தலையில் எரிச்சலை உணர்கிறீர்களோ, அப்போது உடனே தலையை நீரில் அலச வேண்டாம். ஏனெனில் அப்படி எரிச்சல் ஏற்படுவதற்கு காரணம், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகமாக தூண்டப்படுவது தான். எனவே சிறிது நேரம் ஊறவிடுங்கள். * பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள்.

நன்மை இந்த நேச்சுரல் ஷாம்பு தலையில் எண்ணெய் பசை அதிகம் கொண்டவர்களுக்கு ஏற்றது. இந்த ஷாம்புவால் தலைமுடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

ஷாம்பு #4 ஜெலட்டின் ஷாம்பு * ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 1 டேபிள் ஸ்பூன் உண்ணத்தக்க ஜெலட்டின் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின் தலையை நீரில் அலசி, கலந்து வைத்துள்ள கலவையைத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

நன்மை இந்த ஷாம்புவில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளதால், இதனை தலைமுடிக்கு பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியமும், வளர்ச்சியும் மேம்படும்.

Related posts

கொய்யா இலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் …!

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் அற்புத ஹேர் மாஸ்க்!இத ட்ரை பண்ணி பாருங்க…….

nathan

முடி அடர்த்தியாக வளர…

nathan

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்!

nathan

சிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு

nathan

கூந்தல் இளநரையை நிரந்தரமாகப் போக்கும் கறிவேப்பிலை ஹேர்ஆயில்…சூப்பர் டிப்ஸ்…

nathan

முடி வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்

nathan

முடி உதிர்தல் நின்று அடர்த்தியாக வளர வைக்கும் 5 அற்புத குறிப்புகள்!!

nathan