சரும வறட்சி என்பது நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் பொதுவான ஒன்றே. அதுவும் குளிர் காலம் என்றால் கேட்கவே வேண்டாம்; சரும வறட்சியால் பலரும் அவதிக்குள்ளாவார்கள். இதனை கவனிக்காமல் விட்டு விட்டால், நாளடைவில் எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமல்லாது உங்கள் சருமம் அசிங்கமாகவும் காட்சியளிக்கும். பின் வெடிப்புகள் எல்லாம் ஏற்பட்டு ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பலருக்கும் இதற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் கூட பலரும் இதனை அலட்சியமாக விட்டு விடுவார்கள்.
கால்களில் ஏற்படும் இந்த வறண்ட சருமம் தோல் சம்பந்தமான பிரச்சனையாகும். இதனை தோல் மருத்துவர்கள் செரோசிஸ் அல்லது ஆஸ்டீட்டோசிஸ் என அழைக்கின்றனர். நமக்கு புரிந்த மொழியில் சொல்ல வேண்டுமானால் இதனை குளிர் கால அரிப்பு என்றும் கூறலாம். இது பெரும்பாலும் குளிர் காலத்தில் தான் ஏற்படும்; அதுவும் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது. கால்களில் சரும வறட்சி என்பது யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படி வறட்சி ஏற்படும் போது சருமம் சொரசொரப்பாக மாறி விடும். ஏற்கனவே சொன்னதை போல் இதனை கவனிக்காமல் விடும் போது வெடிப்புகள் ஏற்பட்டு விடும். அதனால் இதனை லேசாக எடுத்துக் கொள்ளாமல், அதனை குணப்படுத்தும் வழிமுறைகளை பற்றி மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவ காரணங்களை ஒதுக்குங்கள்
சரும வறட்சி என்பது சில நோய்களுக்கான அறிகுறியாகும். அதே போல் சில மருந்துகள் உண்ணும் போது, அதன் பக்க விளைவாக உங்கள் சருமம் வறட்சியடையும். அப்படிப்பட்ட நேரத்தில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள சரும வறட்சிக்கு காரணம் மருத்துவ நிலையா அல்லது சரும பிரச்சனையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி உறுதி செய்து கொள்ளுங்கள்.
சரியாக குளியுங்கள்
கால்களில் ஏற்பட்டுள்ள சரும வறட்சியை ஆற வைக்க நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்று தெரியுமா? அது மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக குளித்தால், அது நீண்ட நேரமாக இருந்தாலும் சரி அதிக தடவையாக இருந்தாலும் சரி, அது உங்கள் பிரச்சனையை மோசமடைய செய்யும். இதனால் சருமம் மேலும் வறண்டு போகும். வெந்நீரும் சோப்பும் உங்கள் சருமத்தில் உள்ள அதிமுக்கிய ஈரப்பதத்தை அளிக்கும் எண்ணெய்களையும் மாயிஸ்சரைஸர்களையும் நீக்கி விடும். ஒரு நேரத்தில் 10 நிமிடங்களுக்கு மேல், ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் வெந்நீரில் குளிக்காதீர்கள். மாயிஸ்சரைசிங் சோப்புகள் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் சோப்பே பயன்படுத்தாமல் குளியுங்கள்.
குளித்த பின் சரியாக துடைக்கவும்
குளித்த பின், சருமத்தை வேகமாக கைய வைப்பது மட்டும் முக்கியமல்ல; சரியாகவும் காய வைக்க வேண்டும். துண்டை சருமம் முழுவதும் தேய்ப்பதற்கு பதிலாக, அதனை மெல்ல ஒத்தி எடுங்கள். நீங்கள் அழுத்தி தேய்க்கும் போது சருமத்தில் இருந்து ஈரப்பதத்தையும் எடுத்து விடும்.
குளித்த பின் மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும்
குளித்து முடித்தவுடன், உடலை காய வைத்த 3 நிமிடங்களுக்குள், நல்லதொரு மாய்ஸ்சுரைஸரை உங்கள் சருமம் முழுவதும், குறிப்பாக கால்களில் தடவவும். எந்த ஒரு நல்ல மாய்ஸ்சுரைசிங் லோஷனையும் பயன்படுத்தலாம். குழந்தைக்கு தேய்க்கும் எண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை கூட உங்கள் கால்களில் தடவலாம்.
அடிக்கடி ஈரப்பதத்தை அளியுங்கள்
சிறிய மாய்ஸ்சுரைஸர் அல்லது லோஷன் டப்பாவை எப்போதும் உடன் வைத்திடுங்கள். அதனை நாள் முழுவதும் அப்பப்போ உங்கள் உடலின் மீது தடவவும். வாசனை இல்லாத மாய்ஸ்சுரைஸர் தான் மிகவும் சிறந்ததாகும். வாசனை மிக்க லோஷன் என்றால் அவை உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதற்கு பதில், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து விடும்.
சிகப்பு தடுப்புகளை கவனியுங்கள்
கால்களில் அளவுக்கு அதிகமான சரும வறட்சி ஏற்படும் போது சிகப்பு தடுப்புகள் ஏற்படும். இதனை தான் சிரங்கு (எக்செமாடோஸ்)என கூறுகிறார்கள். இந்த சிரங்குகளை சரி செய்ய மருந்து கடைகளில் கிடைக்கும் கார்டிசோன் க்ரீம்களை பயன்படுத்துங்கள். அப்படியும் இந்த பிரச்சனை நீடித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். அவர் பரிந்துரைக்கும் ஸ்ட்ராயிட் ஆயின்மென்ட்டை தடவுங்கள்
ஈரப்பதத்தை அதிகரியுங்கள்
வீட்டில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது உங்கள் சருமத்திலும் ஈரப்பதம் நீடிக்கும். வறண்ட, வெப்பமான காற்று உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து விடும். அதனால் இரவு நேரத்தில் படுக்கையறையில் வெப்பமேற்றும் கருவி ஒன்றை சின்னதாக வைத்துக் கொள்ளுங்கள்.