32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
23 1437633154 1foraquickglowinglook
சரும பராமரிப்பு

15 நிமிடத்தில் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்….

சிலருக்கு நன்கு தூங்கி காலையில் எழுந்த பின்னரும் முகம் பொலிவின்றி காணப்படும். இதனால் நமக்கே நம் முகத்தைக் கண்டு வெறுப்பு ஏற்படும். அப்படி உங்கள் முகம் காலையில் பொலிவின்றி இருந்தால், ஒருசில செயல்களை செய்தால் பொலிவாக்கலாம்.

அதிலும் அலுவலகத்திற்கு காலையில் கிளம்பும் போது, அழகைப் பராமரிக்க நேரம் அதிகம் இருக்காது. எனவே குறைந்த நேரத்திலேயே முகத்தை பொலிவாக்க சில டிப்ஸ்களை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை காலை வேளையில் மட்டுமின்றி, நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் முன் பின்பற்றினாலும், முகம் பொலிவோடு மின்னும்.

சரி, இப்போது 15 நிமிடங்களில் முகத்தை அழகாக ஜொலிக்க வைப்பது எப்படி என்று பார்ப்போமா!!!

அவகேடோ மற்றும் தயிர்

அவகேடோ பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்

எண்ணெய் பசை சருமத்தினருக்கு…

எண்ணெய் பசை சருமத்தினர் மேக்கப் போட்டால், விரைவில் களைந்துவிடும். எனவே இதனை தவிர்க்க, மேக்கப் போடும் முன், டோனர் பயன்படுத்தி பின் மேக்கப் போட்டால், மேக்கப் நீண்ட நேரம் நிலைக்கும்.

உதட்டில் உள்ள கருமை

உதட்டில் கருமைகள் இருந்தால், அவற்றை மறைக்க பிங்க் அல்லது சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அளவாக போட்டுக் கொண்டால், உதட்டில் உள்ள கருமைகளை மறைத்துவிடலாம்.

முகத்திற்கு கண்டிஷனர்

உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், முகத்தில் ஆங்காங்கு தோலுரிந்து காணப்படுவதைத் தவிர்க்க, கண்டிஷனரை முகம் மற்றும் கைகளில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிக்க செல்லுங்கள். இதனால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்குவதோடு, சருமம் மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருக்கும்

பிம்பிளுக்கு டூத் பேஸ்ட்

உங்கள் முகத்தில் பிம்பிள் திடீரென்று வந்திருந்தால், அவ்விடத்தில் டூத் பேஸ்ட்டை வைத்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதனால் பிம்பிள் உலர்ந்துவிடும்.

புத்துணர்ச்சியான மற்றும் வெள்ளையான சருமத்திற்கு…

3 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீயுடன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மாய்ஸ்சுரைசிங் க்ரீம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், முகம் புத்துணர்ச்சியுடனும், வெள்ளையாகவும் காணப்படும்.

அதிகப்படியான எண்ணெயை நீக்க…

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிந்தால், அதனை தடுக்க 3 டேபிள் ஸ்பூன் பப்பளிமாஸ் சாற்றினை முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பிரகாசமாக மின்னும்.

கரும்புள்ளிகள்

கரும்புள்ளிகள் முகத்தில் அதிகம் இருந்தால், அவற்றை நீக்க 1 முட்டையின் வெள்ளைக்கருவுடன் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகமும் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.23 1437633154 1foraquickglowinglook

Related posts

கை, கால், அக்குளில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி!

nathan

கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

இயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..!தெரிந்துகொள்வோமா?

nathan

எண்ணெய் சருமமா? முகப்பருவா? வாரம் இருமுறை ஹெர்பல் ஆவி பிடியுங்கள்!

nathan

இளமையைத் தக்கவைக்கலாம்… ஆன்டி ஏஜிங் க்ரீம்கள், சிகிச்சைகள்!

nathan

இப்படி தினமும் செய்து வாருங்கள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

nathan

சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்

nathan

மார்பகங்களில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகள்!

nathan

ஃபேஷியல் எண்ணெய்களை சருமத்திற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..

nathan