27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
ips eyelids grow thickl
கண்கள் பராமரிப்பு

கண் இமைகள் வளர சில டிப்ஸ்

1. தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.

2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.

3. ஆமணக்கெண்ணெய்/வைட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வாஸ்லினை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த நன்மையைத் தரும். இரவில் படுக்கும் முன் கண் இமைகள் மீது வாஸ்லினைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விட வேண்டும். அப்படி கழுவ மறந்து விட்டால் அன்று முழுவதும் பிசுபிசுப்புடன் இருக்கும்.

4. நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப் பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோட்டீன் உணவை உண்ண வேண்டும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

ips eyelids grow thickl

 

Related posts

கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்

nathan

கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா…?

nathan

கருவளையம் மறைய. நீங்களும் அழகு ராணி தான்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தேனைக் கொண்டு கருவளையங்களைப் போக்குவது எப்படி?

nathan

கருவளையத்தை போக்கும் நேச்சுரல் தெரப்பி

nathan

உங்களுக்கு கண் பார்வைக் கோளாறு நீங்கி அற்புதமான பார்வைத் திறனை தரும் வாகை மருந்து!!

nathan

கருவளையங்களுக்கான காரணங்கள், தீர்வுகள், லேட்டஸ்ட் சிகிச்சைகள்!…

sangika

புருவம் போதிய வளர்ச்சி பெற பலன் தரும் இந்த குறிப்புகள்!….

sangika

கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்

nathan