மென்மையான சருமத்தை பெற 4 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
• முகப்பருவை போக்க ஒரு கப் நீரில் கொத்தமல்லி, சிறிது சீமைச்சாமந்தி பூ அல்லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து குளிர வைத்து வடிகட்டி அந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ, முகப்பரு பிரச்சனையை விரைவில் போக்கலாம்.
• மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால் 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.
• சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் நல்ல மாற்றம் உண்டாகும்.
• முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த கொத்தமல்லி பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் கொத்தமல்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே கொத்தமல்லி சாற்றினை எடுத்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
• ஒரு சிலருக்கு உதடு கருப்பாக இருக்கும். அவர்கள் தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
• சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து, அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.