25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.800.90 4
தலைமுடி சிகிச்சை

பெண்கள் மண்டையில் கொண்டை போடுவது ஏன் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

தலையை விரித்துப்போட்டு சுத்தாதே என்று தாய்மார்கள் மகளை திட்டுவதை கேட்டிருப்போம். கொண்டை போடும் பழக்கம் எப்படி வந்தது? தலைமுடியை விரித்துப்போட்டால் என்ன நடக்கும்? என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஆன்மீகத்தோடு சேர்த்த அறிவியலையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த காலத்தில் முனிவர்கள் தவத்தினால் உண்டான சக்தியை தலை உச்சிக்கு அடையச்செய்யும் போது, சக்தி விரயமாகி வெளியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கொண்டையிடும் பழக்கத்தை கடைபிடித்துள்ளனர்.

அப்படி தலையில் கொண்டை இல்லை என்றாலும், தலையை மூடியவாறு ஆடை அணிந்திருப்பார்கள். உடலில் உருவாகும் சக்தி தலை உச்சியை அடைந்த பிறகே உடலை விட்டு வெளியேறும் என்பதால், இவ்வாறு செய்துள்ளனர்.

இந்த நுணுக்கத்தை கையாண்டு, உடலில் சக்தி விரையம் உண்டாவதை தடுத்து, யோகிகளும், முனிவர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்ந்துள்ளனர். ஆன்மீகத்தில் முக்கியமானது, உடலின் சக்தி விரயத்தை தடுப்பது.

இந்த முறையானது காலப்போக்கில், மெல்ல மெல்ல அடுத்தடுத்த சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டு, நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தோடு முடிவுக்கு வந்தது.

இன்றைக்கும், கிராமத்து பக்கம் வயதானவர்கள், தலை முடியை விரித்துப்போட்டு திரியாதே என்று சொல்லக்காரணமும் இது தான்.

அவங்க சின்னதா சொல்லும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும், மாபெரும் மர்மங்கள் மறைந்திருக்கும். இது போன்ற இன்னும் பல நம்பிக்கைகளை கிராமப்பக்கம் காண முடியும்.

Related posts

பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடிப் பிளவுக்குத் தீர்வு!

nathan

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan

பெண்களே முடி கிடு கிடுனு வளர இதை தடவுங்க…

nathan

எப்போது முடி நரைக்க தொடங்கும்

nathan

வறண்ட கரடுமுரடான கூந்தலா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

முடி கொட்டுவதை தடுத்து முடி வளர உதவ இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுனா போதுமாம்!

nathan

இள நரையை மறையச் செய்யனுமா? இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!!

nathan

இளநரையை கருமையாக மாற்றும் இயற்கை மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

nathan

பளபளக்கும் கூந்தல் வேணுமா?

nathan