22 62200
அழகு குறிப்புகள்

உக்ரைன் சுற்றுலா பயணிகளிடையே கருத்து மோதல்! (Video)

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஏழாவது நாளாகவும் போர் நீடித்துள்ளது. இந்த போரின் போது இரு தரப்பினரும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியுள்ளன. பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரேனியர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடையில் அமைதியின்மை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இரண்டு ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிகள் அவர்களுடன் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

இவை தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் வெடித்துள்ள யுத்தம் காரணமாக, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வன்முறை அதிகரிப்பதாலும் பல சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் இங்கு சிக்கித் தவிக்கின்றனர்.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஏறக்குறைய 4,000 உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளும் 10,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா பயணிகள் உள்ள சுற்றுலா விடுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்க பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நள்ளிரவிலும் இட்லி கிடைக்கும்!!இந்தியாவில் இட்லி ATM மெஷின் அறிமுகம்

nathan

வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் டிப்ஸ்

nathan

தீக்காயங்களுக்கான சிகிச்சை!….

sangika

ஆண்களின் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க!…

sangika

முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

nathan

தோலின் நிறமாற்றத்தை போக்க இயற்கை முறையில் கிடைக்கும் ஸ்கின்டேன்

nathan

பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட ராமின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா ….

nathan

அழகுப் பராமரிப்பில் கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும்

nathan

உங்களுக்கு சளி, இருமல் அல்லது தொண்டை வலி உள்ளதா?

nathan