28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
lowlights hair colour
ஹேர் கலரிங்

டை அல்லது கலரிங் செய்தவர்களுக்கு சின்ன டிப்ஸ்

டெம்ப்ரவரி, செமி பர்மணன்ட், பர்மணன்ட் போன்ற மூன்று வகைகளில் ஹேர் கலரிங் பொருட்கள் தற்போது கடைகளில் கிடைக்கிறது. ஒரே ஒருநாள் இருந்தால் போதும் என்று விருப்பமுள்ளவர்கள் டெம்ப்ரவரி வகையான டை அல்லது கலரிங் பொருட்களை உபயோகிக்கலாம்.

செமி பர்மணன்ட் என்பது 8 முதல் 10 அல்லது 12 முறை தலைக்கு குளித்தபின் அகன்று விடும் வகை. ஒவ்வொரு முறையும் தலைக்கு குளிக்கும்போதும், நீங்கள் உபயோகித்த டை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரோடு வந்துகொண்டே இருக்கும். பர்மணன்ட் என்பது நிரந்தரமாக உங்கள் தலையிலேயே தங்கிவிடும் வகை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எந்த வகையான டையை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

நார்மல் ஷாம்பு, கண்டிஷ்னரை உபயோகிக்காமல், டைய்டு முடிக்காக இருக்கும் பிரத்யேக ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் சீரம்களை உபயோகிப்பது அவசியம். கெமிக்கல் டை இருப்பதால் மேலும் அதிகமாக கெமிக்கல் இருக்கும் ஷாம்பூக்களை தவிர்த்து மெல்லிய ஷாம்பூ, கண்டிஷ்னர் உபயோகியுங்கள். பார்லரில் தலைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துகொள்ளும்போது டைய்டு முடிகளுக்கு இருக்கும் ஸ்பா, ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்ளுங்கள்.

அடிக்கடி முடியின் கலரை மாற்றுவது, டை அடித்துகொள்வதை தவிருங்கள். இது முடிக்கு எளிதாக பாதிப்பை ஏற்படுத்தலாம். மாதத்திற்கு ஒருமுறை டை உபயோகிப்பது நல்லது. ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கெமிக்கல் டைகளால் உடலில் நச்சு சேர வாய்ப்புள்ளதால், நிறைய தண்ணீர் குடித்து நச்சுக்களை வெளியேற்றுவது பின்னாளில் பெரிய பாதிப்புகளை விளைவிக்காது.lowlights hair colour

Related posts

பிளாக் ஹென்னா பேக்

nathan

இளநரையை மறைய செய்யும் கரிசலாங்கண்ணி தைலம்

nathan

இளம் நரையை மறைக்கும் இயற்கை ஹேர் டை

nathan

இளநரை ஏன் ஏற்படுகிறது?.. இவை தான் காரணங்களாக இருக்கலாம்…

sangika

நரை முடியை மறைக்கும் ஹேர் பேக்குகள் !!

nathan

முடியினை கருமையாக்க எளிய வழிகள்

nathan

வீட்டிலேயே தயாரிக்கலாம் நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகள்

nathan

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைக்கும் ஹேர் மாஸ்க்

nathan

நரை முடியை மறைக்கும் ஹேர் பேக்குகள் !!இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan