முதலில் வெர்மிலியான் நெயில் ஸ்பா பற்றி பார்க்கலாம். கை மற்றும் கால்களை அழகுபடுத்தும் பணியை இது செய்கிறது. நகங்களை வெட்டி அழகுபடுத்துதல், கைகளுக்கு மசாஜ் என எல்லாம் இந்த முறையில் உண்டு. அடுத்தது பெசிக மெனி முறை. இம்முறையில் கைகளை முதலில் வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைத்த பின்பு நகங்களை அழகாக வடிவமைத்து மசாஜ் செய்து நெயில் பாலிஷ் போடப்படும்.
வெர்மிலியான் மேனி :
வெதுவெதுப்பான பாலில் உங்கள் கால் மற்றும் கைகளை சிறிது நேரம் வைத்து தேன் மற்றும் கரும்பு மூலம் ஸ்கரப் செய்வது இதன் ஸ்பெஷல்.
வெர்மிலியான் பெடி :
கால் நகங்களில் உள்ள அழுக்கை அகற்றி நகத்தை அழகாய் வெட்டி தேன் மற்றும் பால் கொண்டு ஸ்கரப் செய்வது இதன் ஸ்பெஷல்.
நெயில் வைட்டனிங் :
நகத்தில் உள்ள கறைகளை அப்புறப்படுத்தி அவற்றை பளிச்சென வைப்பதே இதன் சிறப்பு.
பேசிக் பெடி :
நல்ல வெதுவெதுப்பான நீரில் கால்களை முக்கி மசாஜ் செய்து நகங்களை வடிவமைப்பது இம்முறையில் சிறப்பாக வரும். மண் கொண்டு பாதங்களுக்கு சிகிச்சை செய்யும் முறைக்கு `அன் இன்டிமேட் ஜர்னி’ என்று பெயர்.
நெயில் ஆர்ட் :
இம்முறையில் நகத்தில் அழகான ஓவியம் வரையப்படும். இவை நெயில்பாலிஷ் போல அல்லாது நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். இவற்றில் கற்கள், முத்துக்கள், சிலிட்டர் ஆகியவை அழகுபடுத்த உபயோகிக்கப்படும். நக அழகில் பெண்கள் அடுத்த கட்டம் போய் விட்டார்கள். நகத்தில் ஓட்டை போட்டு நக மாட்டி அணிந்து கொள்கிறார்கள். நன்கு மெனிக்யூர் செய்யப்பட்ட விரல்களில் அதிகமாகவே பளிச்சிடும்.