25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
glow skin 1
Other News

பார்லர் போகாமலே பொலிவான சருமம் பெற வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ரேஷன் கடைகள், மருத்துவமனைகள், காவல் துறை போன்ற அத்தியாவசிய துறைகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மற்றவை அனைத்தும் மூடி இருக்கின்றன. இதனால் மக்களுக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பல்வேறு சரும பராமரிப்பிற்காக அழகு நிலையம் செல்பவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் நிலை உள்ளது. பொதுவாக பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக 15-20 நாட்களுக்கு ஒருமுறை அழகு நிலையம் செல்வதை வழக்காகக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக வாக்சிங், த்ரெட்டிங் , பேஷியல் போன்றவை அழகு சிகிச்சைகளில் குறிப்பாக பின்பற்றப்படுபவையாகும்.

ஆனால் தற்போதைய 21 நாட்கள் ஊரடங்கு, அவர்களை பார்லர் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் இதுவும் நன்மைக்காகவே. அனைவருக்கும் அழகான மற்றும் சிறப்பான சருமம் வேண்டும் என்பது விருப்பமாகும். ஆகவே வீட்டில் இருந்து கொண்டே இந்த தீர்வுகளைப் பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம். இந்த எளிய தீர்வுகளைப் பின்பற்றுவதால் பொலிவான சருமம் பெறலாம்.

பொலிவான சருமம் பெற பாதாம்

உங்கள் முகத்தில் சுருக்கம் மற்றும் திட்டுக்கள் இருந்தால் நீங்கள் உங்கள் முகத்திற்கு பாதாம் பயன்படுத்தலாம். பாதாம் பேக் பயன்படுத்தி உங்கள் முகப்பொலிவை மீட்டெடுக்கலாம். இதற்கு உங்களுக்குத் தேவையானது ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில பாதாம். பாதாம் துண்டுகளை அரைத்து தேன் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக் காயத் தொடங்கும்போது, முகத்தை சூழல் வடிவத்தில் மசாஜ் செய்து பிறகு தண்ணீரால் கழுவவும். முகத்தில் திட்டுக்கள், தழும்புகள் போன்றவற்றைக் glow skin 1கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

ரோஜா போன்ற சருமம் பெற ரோஜா

உங்கள் முகம் பளபளப்பாக இருக்க உங்கள் அழகு குறிப்பில் ரோஜாக்களை பயன்படுத்தவும். புதிய ரோஜா மலர்களை அரைத்து பாலுடன் கலந்து முகத்திற்கு பயன்படுத்தவும். இந்த விழுதை உங்கள் முகம், கை மற்றும் கழுத்து போன்ற இடங்களில் தடவவும். ஒரு மணிநேரம் உங்கள் முகத்தில் அதனை வைத்துக் கொண்டு பின்பு தண்ணீரால் கழுவவும். ரோஜா விழுதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும்போது உங்கள் முகத்தில் உண்டாகும் மாற்றத்தை உங்களால் எளிதாக கவனிக்க முடியும்.

சரும பராமரிப்பில் ஓட்ஸ்

உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க, ஓட்ஸ் மற்றும் யோகர்ட் கலந்து தயாரித்த விழுதை பயன்படுத்துங்கள். இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, உலர வையுங்கள். முகத்தில் இந்த கலவை முற்றிலும் உலர்ந்த பின்பு பன்னீர் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள். அடுத்த சில நாட்களில் உங்கள் முகம் மின்னத் தொடங்கும். ஓட்ஸ் ஒரு இயற்கை எக்ஸ்போலின்ட் ஆகும் . இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் போன்றவற்றை போக்கும் தன்மை கொண்டது. இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, சூழல் வடிவத்தில் மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வெகுவாகக் குறையத் தொடங்குகின்றன.

தேன் மற்றும் பன்னீர் (ரோஸ் வாட்டர்) கலவை

உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படும் தேன், சருமத்திற்கு சிறந்த பலனைத் தரும். சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகிறது, பிரகாசமாகிறது மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கிறது. தெளிவான சருமம் பெற தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும். மேலும் இந்த கலவை எல்லாவித சருமத்திற்கும் பொருந்தும்.

Related posts

வைரலாகும் விஜயின் அன்னையர் தின வாழ்த்து!

nathan

ஆர்யா – சாயிஷாவின் மகள் ஆரியனாவா இது!!புகைப்படம்

nathan

ரூ.1.1 கோடி சம்பளத்தில் வேலை – சம்ப்ரீத்திக்கு கிடைத்த வாய்ப்பு!

nathan

விஜயகாந்த் ஒரு சகாப்தம் – இலை போட்டு வயிறார உணவிட்ட ஏழைகளின் நாயகன்..

nathan

தலைமுடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

மேஷம் முதல் மீனம் வரை!ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

nathan

“லியோ” தங்கச்சி மடோனா செபாஸ்டியன் கிளாமரான புகைப்படம்

nathan

உள்ளங்கால் அரிப்பு காரணம்

nathan

பரணி நட்சத்திரம் ஆண் திருமண வாழ்க்கை

nathan