32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
22 620d40aa911
சிற்றுண்டி வகைகள்

சுவையான மொறுமொறு கோலா உருண்டை

சூப்பரான சோயா கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் – 1 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 2
டீஸ்பூன் (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மீல் மேக்கரை வேக வைப்பதற்கு
பால் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
மீல் மேக்கருடன் அரைப்பதற்கு…
சோம்பு – 3/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கசகசா – 3/4 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 1

செய்முறை
வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் மீல் மேக்கரைப் போட்டு 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, 15 நிமிடம் அப்படியே ஊற வைத்து, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளவும். பின் மீல் மேக்கரில் உள்ள நீரை கையால் பிழிந்து கொள்ளவும்.

 

மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் சோம்பு, பச்சை மிளகாய், கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், தீயை குறைத்துவிட்டு, உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோயா கோலா உருண்டை தயார்.

Related posts

கம்பு புட்டு

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

தக்காளி – கார்ன் புலாவ்

nathan

பெப்பர் இட்லி

nathan

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்

nathan

பிரெட் பீட்சா

nathan

சுவையான பாஸ்தா பக்கோடா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

nathan