கிரிப்டோகரன்சிக்கான வரவேற்பும் அதன் வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் கிரிப்டோகரன்சி தொடர்பான மோசடிகளும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கிரிப்டோகரன்சிகள் மூலம் நிதியுதவி அளிப்பதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இதனால் சில நாடுகள் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களுக்கு தடை விதித்துள்ளது.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
கிரிப்டோகரன்சி என்பது ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது, நாணயம் அல்லது நோட்டு போன்ற தொட்டு உணரும் வடிவத்தில் உங்கள் கையில் இருக்காது.
இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை. டிஜிட்டல் கரன்சி காரணமாக இணைய மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், எத்தனை கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் அதில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை.
எவ்வாறாயினும், கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதாகவும், தொற்றுநோய் காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கிரிப்டோகரன்சி பயன்பாடு
டிஜிட்டல் வங்கி, ப்லொக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அந்த இணைந்த நிறுவனங்களுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான சாத்தியமான விதிமுறைகள் குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டிஜிட்டல் வங்கி முறைமை, ப்லொக்செயின் (Block chain) தொழிநுட்பம் மற்றும் க்ரிப்ரோகரன்சி (Crypto Currency) தொடர்பான நிறுவனங்களுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக 2021 ஒக்ரோபர் மாதம் 05ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுஜீவ முதலிகே தலைமையில் 08 உறுப்பினர்களுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் இறுதி அறிக்கையினை 2022 யூன் மாதம் 30ம் திகதி ஆகும் போது சமர்ப்பிப்பதற்கும், குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக குறித்த துறைகளில் செயலாற்றும் தொழிநுட்ப வல்லுநர்கள் இருவரை உறுப்பினர்களாக நியமிப்பதற்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் யோசனை தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
Buy Crypto