27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
3ce52847 63a4 4c63 b149 0f4ee7a67b1c S secvpf
சைவம்

வெண்டைக்காய் மோர் குழம்பு

தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் – 1 கப்
வெண்டைக்காய் – 8
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு :

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 1
தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை :
3ce52847 63a4 4c63 b149 0f4ee7a67b1c S secvpf
* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, வெண்டைக்காய் நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!

Related posts

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

நிமிடத்தில் செய்யலாம் கேரட் சாதம்

nathan

பாகற்காய் புளிக்குழம்பு

nathan

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்

nathan

மாங்காய் சாதம்

nathan

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு – 65

nathan

சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி

nathan

பேபி கார்ன் மசாலா

nathan