26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Belly for men to know what the reason
அழகு குறிப்புகள்

தொப்பை அதிகரித்து கொண்டே போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

நிறைந்த உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக இப்பொழுதெல்லாம் ஓடி ஆடி வேலை செய்பவர்களை விட, ஏசியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது.

அதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாகாமல், அதில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றில் தங்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன.

அதுமட்டுமின்றி, இப்போது ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் நிறைய உணவுகள் வந்துள்ளன. இவை அனைத்தும், பசியின் உணர்வை அடிக்கடி தூண்டுபவை.

ஆகவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

இவ்வாறு தொப்பை இருப்பவர்களுக்கு, நோய்கள் மிகவும் விரைவில் தாக்கும். மேலும் சிலருக்கு அவர்களது உடலையே சுமந்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் அத்தகைய தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

அத்தகைய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவைகளை டயட்டில் சேர்த்து, தொப்பையைக் குறையுங்களேன்…

  1. ஓட்ஸ்
    ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.
  2. முட்டையின் வெள்ளைக்கரு.
    முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையின் வெள்ளைகருவை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.
  3. ஆப்பிள்
    ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.
  4. மிளகாய்
    மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.
  5. பூண்டு
    பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.
  6. பருப்பு வகைகள்
    பருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.
  7. சிட்ரஸ் பழங்கள்
    சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.
  8. மீன்
    மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
  9. நட்ஸ்
    நட்ஸில் வால்நட், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் நட்ஸில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் நிறைந்துள்ளது. இவை தொப்பையை ஏற்படுத்தாது. எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.
  10. தேன்
    தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.
  11. க்ரீன் டீ
    க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
  12. பட்டை
    பட்டையை உணவில் சேர்த்து வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.
  13. பப்பளிமாசு (Grapefruit)
    தினமும் உணவு சாப்பிடும் முன் பாதி பப்பளிமாசு பழத்தை சாப்பிட்டால், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை தவிர்க்கலாம்.
  14. கேரட்
    கேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.
  15. நீர்
    தினமும் குறைந்தது 2 லிட்டர் நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
  16. நவதானியங்கள்
    நவதானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். எனவே உடல் எடையை குறைக்க நவதானியங்களால் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்.
  17. அன்னாசிப்பழம்
    ஸ்நாக்ஸ் நேரத்தில், அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.
  18. கொழுப்பில்லாத பால் பொருட்கள்
    உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் கொழுப்பில்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  19. இஞ்சி
    இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
  20. மஞ்சள் தூள்
  21. மஞ்சள் தூளும் உடல் எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் ஒன்றாகும்.

Related posts

‘டிரை பிரஷ்ஷிங்’ பயன்படுத்துவது பற்றித் தெரியுமா?

sangika

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

திருமணமாகி 60 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

எண்ணெய் சருமத்திற்கு உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

nathan

சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….

sangika

சுடிதார் ஸ்பெஷல்

nathan

இது மீண்டும் முடி வளர வேர்கால்களை உருவாக்கி தருகிறது!…

sangika

சுவையான ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan