27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
06 1446794633 5 mehandi
மேக்கப்

பெண்களே மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா? இதை படியுங்கள்

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

சமையல் எண்ணெய்

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.

கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ்

மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

கிராம்பு புகை

கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சை சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

குறிப்பு

vகைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 12 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.

Related posts

வீட்டிலேயே ஹேர் கட் செய்வது எப்படி?

nathan

பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

nathan

எண்ணெய் பசை அதிகமா இருக்கா?

nathan

உங்களுக்கு தெரியுமா மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா?

nathan

ஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்!

nathan

வீட்டிலேயெ உங்கள் ஒப்பனைகளை நீக்கும் எளிய வழிகள்

nathan

கண்கள் மிளிர…

nathan

கண்களை அலங்கரியுங்கள்

nathan

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா,,

nathan