27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முக பொலிவுக்கு கடுகு ஃபேஷியல்

images (1)வீட்டில் சமையலில் பயன்படும் கடுகு, சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இந்த கடுகை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் கடுகை எடுத்துக் கொண்டு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* கடுகை வைத்து ஃபேஷியல் செய்வதில், மிகவும் சிறந்தது என்றால், அது இந்த முறை தான். இந்த முறையால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

* கடுகு மற்றும் கற்றாழையை கலந்து செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ள தூசிகள் போன்றவை போய்விடும். இந்த ஸ்கரப் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இது ஒரு மிகவும் சிறப்பான இயற்கை ஸ்கரப். இந்த முறையால், கடுகு நிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப் பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.

* முகம் நன்கு மினுமினுப்போடு காணப்பட, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 2-3 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

– மேற்கூறிய முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் படிப்படியாக முகம் பொலிவாவதை தெரிந்து கொள்ளலாம்.

Related posts

பளப் பளப்பான சருமத்தை பெற்றுதரும் மூலிகைப் பொருட்கள்!

nathan

பிரபல நடிகை கவலைக்கிடம் !மூளையில் ரத்த கசிவு…

nathan

அழகான நகங்களைப் பெற

nathan

இதோ சூப்பரான டிப்ஸ்! முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளியமுறையில் நீக்கனுமா?

nathan

கழுத்தின் கருமையைப் போக்க..

nathan

இயற்கையான முறையையில் கரும்புள்ளிகளை போக்க……

sangika

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?

nathan

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற விவகாரம் :கதறி அழுத காதலி!!

nathan

முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan