27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
ld3875
தலைமுடி சிகிச்சை

திடீர் கூந்தல் உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

நெல்லிக்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன், பூந்திக் கொட்டை தூள் 2 டேபிள்ஸ்பூன், சீயக்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன் ஆகியவற்றுடன் 1 முட்டையை அடித்துக் குழைக்கவும். இதைத் தலையில் தடவி 25 நிமிடங்கள் காத்திருந்து, மிதமான ஷாம்பு உபயோகித்து அலசவும். இந்த சிகிச்சையை வாரத்துக்கு 2 நாட்கள் செய்யலாம்.

நெல்லிக்காய் சாறு 1 கப், எலுமிச்சைச்சாறு 3 டேபிள்ஸ்பூன்- இரண்டையும் கலந்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறி, சாதாரண தண்ணீரில் அலசவும்.

கறிவேப்பிலை 20, ஓர் எலுமிச்சைப் பழத்தின் தோல், சீயக்காய் தூள் 3 டேபிள்ஸ்பூன், வெந்தயம் மற்றும் பச்சைப் பயறு தலா 2 டேபிள்ஸ்பூன் ஆகிய எல்லாவற்றையும் காய வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தலை குளிக்கும் போது ஷாம்புவுக்கு பதில் இந்தப் பொடியை உபயோகித்து, நிறைய தண்ணீர் விட்டு அலசவும்.
ld3875
2 டேபிள்ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயில் 1 டேபிள்ஸ்பூன் நெல்லிக்காய் சாறும், பாதி எலுமிச்சைப்பழத்தின் சாறும் கலக்கவும். இதைத் தலையில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து அலசவும்.

கற்றாழையின் உள்ளே இருக்கும் சதைப்பாங்கான பகுதியில் கைப்பிடியளவு வெந்தயத்தைத் திணித்து மூடி வைக்கவும். மறுநாள் கற்றாழை ஜெல்லுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிக்கவும்.

ஒற்றைச் செம்பருத்திப் பூக்களை சிறிது தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துக் கொள்ளவும். அதை இரவில் தலையில் தடவிக் கொண்டு, மறுநாள் காலையில் அலசிவிடவும்.

1 கப் ஃப்ரெஷ் கொத்தமல்லித் தழைகளைக் கழுவி எடுத்து லேசாக தண்ணீர் விட்டு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அதை நன்கு வடிகட்டி, சாறு எடுக்கவும். அந்தச் சாற்றில் பஞ்சைத் தொட்டு தலை முழுக்கத் தடவி, 1 மணி நேரம் ஊறவும். பிறகு மிதமான ஷாம்பு அல்லது சீயக்காய் உபயோகித்து அலசவும்.

Related posts

வெள்ளை முடி அதிகமா இருக்கா?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் இயற்கை மசாஜ்

nathan

பொடுகு பிரச்சனையில் இருந்து தலைமுடியை பராமரிக்க இந்த பொருள் போதும்! தெரிஞ்சிக்கங்க…

nathan

முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

nathan

இளநரையை மறையச் செய்யும் ஒரு மூலிகை எண்ணெய் !!

nathan

ஒரு முறை யூஸ் பண்ணா போதும் கூந்தல் பிரச்சனையும் சரியாகிடும்…

nathan

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… குறைந்த வயதில் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழ இதான் காரணம்!

nathan

கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கும் வழிகள்

nathan