28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
Rowdy Baby Surya Sikkanthar were arrested in
அழகு குறிப்புகள்

டிக் டாக் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

டிக் டாக் புகழ் சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

டிக் டாக் புகழ் சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சுப்புலட்சுமி என்ற சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

டிக் டாக் செயலி தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன்மூலம் கொஞ்சம் வெளியுலக வெளிச்சத்துக்கு வந்த சிலர் யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என சோஷீயல் மீடியாக்களில் சோக்காக இப்போதும் வலம் வருகின்றனர். அதில் ஒருவர் தான் இந்த ரவுடி பேபி சூர்யா. பெயரில் பேபி இருந்தாலும் ஆண்ட்டியாக இருக்கும் சூர்யா, டிக் டாக்கில் திரையிசை பாடல்களுக்கு நடனமாடியும், ரியாக்‌ஷன்களாலும் லைக்ஸ்களை அள்ளினார்.

நாளடைவில் கவர்ச்சியை காட்டி ஃபாலோயர்களை அள்ளினார். இவரது இயற்பெயர் சுப்புலட்சுமி. ஆரம்பத்தில் கலக்கல் ராணியாக இருந்த சூர்யா அதன்பின் நிஜ ரவுடியாகவே மாறிப்போனார். வீடியோக்களில் டேய்.. வாடா போடா என வார்த்தைகளை வீசத் தொடங்கினார். ஜி.பி. முத்து உடன் சேர்ந்த சூர்யா தன் சொந்தப் பிரச்னைகளையும் வீடியோக்கள் மூலம் கொட்டத் தொடங்கினார். ரவுடி பேபி சூர்யாவுடன் ஆரம்பத்தில் டூயட் பாடிய டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து இடையே முட்டல் மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது. இதில் கடுப்பான ஜி.பி. முத்து ரவுடி பேபியை கழற்றி விட்டார்.

வனிதா, இலக்கியா உடன் மோதல் சிங்கப்பூர் சிக்கல், டிக் டாக் இலக்கியாவுடன் மோதல் என சோஷியல் மீடியாக்களில் உலவும் நெட்டிசன்களுக்கு கண்டெண்டாக மாறினார். வனிதாவுடன் சண்டை போட்டு அதிக அளவில் பேமஸ் ஆகி கைது வரை போனார். தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்து செய்தியில் இடம்பிடித்தார். சூர்யா சிக்கா ஜோடி இறுதியில் வந்து ரவுடி பேபி சூர்யாவுடன் இணைந்தவர் தான் சிக்கந்தர்ஷா எனும் சிக்கா.

அவரது ஆண் நண்பர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக குடும்பம் இருந்தாலும் சிக்காவும் ரவுடி பேபி சூர்யாவும் இணைந்து டூயட் பாடினார்கள். அவ்வப்போது அடிக்கடி தகராறு வரும் இருவரும் வீடியோக்களை போட்டு ஆபாசமாக திட்டிக் கொள்வார்கள். வீடியோக்களில் முட்டி மோதிக்கொண்டாலும் மீண்டும் இணைந்துக் கொள்வார்கள். இவர்களின் ஆபாச பேச்சுகளும் எல்லை மீறிப்போகவே பார்வையாளர்கள் கடுப்பானார்கள். மதுரையில் கைது கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த யூடியூபர் தம்பதியை இழிவாக பேசியும், அவர்களின் தொலைபேசி எண்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன் ரவுடிபேபி சூர்யா மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து மதுரையில் வைத்து ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கத்தர்ஷா ஆகியோரை கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் டிக் டாக் சூர்யா மற்றும் சிக்கா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இருவரும் எந்த நேரத்திலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சுப்புலட்சுமி என்ற சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.- source: oneindia

Related posts

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க ,beauty tips tamil,beauty tips skin tamil

nathan

கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..’பரு’வப் பிரச்சினையா?

nathan

சாப்பிட்ட உடனே இவற்றை செய்கிறீர்களா?

sangika

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்

nathan

இருண்ட அல்லது கருப்பு உதடுகளை சரி செய்வதற்கான‌ 15 அழகு குறிப்புகள்

nathan

சுவையான புலாவ் செய்வது எப்படி? ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும்…

nathan

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

nathan

கிராம்பு எண்ணெய் (Clove Oil) சருமத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வயதான அறிகுறிகளை அகற்ற கிராம்பு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

nathan