23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
647687fbec8594171b0e87741
அழகு குறிப்புகள்

சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…!!சூப்பர் டிப்ஸ்..

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவவேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளிப்பதால், தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
647687fbec8594171b0e87741
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும்.

வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல செய்து, கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.

Related posts

எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

sangika

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

அரண்மனை போல மாறிய பிக் பாஸ் வீடு !ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு!

nathan

தங்கம் போல் ஜொலிக்க தக்காளி!…

nathan

அழகு குறிப்புகள், பளிச்சென்று இருக்க..,BEAUTY TIPS IN TAMIL

nathan

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

nathan

பிக்பாஸ் அல்டிமேட்.. முதல் நாளிலேயே பாலாஜியை நாமினேட் செய்த சினேகன்!

nathan

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan