25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அலங்காரம்மணப்பெண் அலங்காரம்

அழகு குறிப்புகள்:மணப்பெண் அலங்காரம்!

download (6)நிச்சயதார்த்தத்தின் போதே உங்களையும், உங்கள் அலங்காரத்தையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும் உங்களவர் மணக்கோலத்தில் நீங்கள் பட்டுடுத்தி, நகைகள் அணிந்து தேவதையாய் பிரகாசிக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் அல்லவா? அதனால் இந்த இதழில் மாலை ரிசப்ஷனுக்கும், காலை முகூர்த்தத்திற்கும் என்னென்ன நகைகள் தேர்வு செய்து, எப்படி அணியலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

நிச்சயதார்த்த அலங்காரத்தை, திருமண அலங்காரத்துக்கு ஒரு ஒத்திகையாக (trial dressing) எடுத்துக் கொள்ளலாம். நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தையும், வீடியோவையும் பார்த்தாலே, நீங்கள் அணிந்திருக்கும் நகைகள் உங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை நன்கு உணரலாம். உதாரணமாக பெரிய ஜிமிக்கி உங்களுக்கு சற்று பொருந்தாமல் இருக்கலாம் அல்லது நெத்தி சுட்டியின் அகலமான பதக்கம் உங்கள் முக அமைப்புக்கு சரியில்லாமல் இருக்கலாம். இவற்றை மனதில் கொண்டு, இது போன்ற சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து கொண்டால் திருமணத்தின்போது பர்ஃபெக்ட் மணமகளாக காட்சியளிப்பீர்கள்.

ஒவ்வொரு பிரிவினருக்கும் திருமண சடங்கு, சம்பிரதாயங்கள் மாறுபடும் காரணத்தால் முதலில் மணப்பெண் அவர்களது கலாச்சார முறைப்படி என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு, எந்த நிகழ்ச்சிக்கு எந்த புடவை மற்றும் நகை அணியலாம் என்று ஒரு தனி லிஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரே சமயத்தில் மாமன் சீர், பெண் அழைப்பு என்று இரண்டு மூன்று சடங்குகள் இருந்தால், மணப்பெண் 2 அல்லது 3 புடவைகளை மாற்றி மாற்றி அணிய வேண்டியிருக்கும். அந்தச் சமயம், ஒவ்வொரு முறையும் நாம் நகைகளையும், அலங்காரங்களையும் புடவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியாது. அதனால் நாம் தேர்வு செய்யும் நகைகள் பொதுவாக அனைத்துப் புடவைகளுக்கும் பொருந்துமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, நீல நிறப் புடவைக்கு மேட்சாக நாம் நீல நிறத்தில் நகைகள் மற்றும் மலர்கள் அணிந்துக் கொண்டால், பிறகு உடுத்தப்போகும் “மெரூன்” நிறப் புடவைக்கும், “லேவண்டர்” நிறப் புடவைக்கும் அது சற்றும் பொருந்தாதது. எனவே கோல்டன் நிற நெக்லஸில் மெரூன் நிற கற்கள் மற்றும் பீட்ஸ்கள் பொருந்திய நகைகள் அல்லது வெள்ளைக் கல் நகைகளை அணியலாம்.

அதுவே ரிசப்ஷன் என்று பார்த்தால், மாப்பிள்ளை அருகில் ஜம்மென்று நீங்கள் நிற்க, அட்டகாசமாய் ட்ரெஸ்ஸிங் செய்து கொள்ளலாம். ஏனெனில் பெரும்பாலும் வரவேற்பின்போது, அலுங்காமல் குலுங்காமல் நின்றுக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால், சற்று ஹெவியான புடவையும் நகைகளும் அணிந்துக் கொள்ளலாம்.

மாலை நேரம் என்பதால், வெள்ளைக்கல் நகைகள், பிரகாசமாக இருக்கும் என்று நீங்கள் விரும்பினால் அமெரிக்கன் டைமண்ட் பதித்த வெள்ளி, கோல்டு ஃபார்மிங் நகைகளில் பிரைடல் செட்டுகளைத் தேர்வு செய்யலாம். தங்க வைர நகைகளில் ஆரம், நெக்லெஸ், கம்மல்கள் எல்லாம் செட்டாக சிலரிடம் இருந்தாலும்கூட ஒட்டியாணம், வங்கி, ஜடைசெட் போன்றவை இல்லாமல் இருக்கலாம். அதனால் பெண் அலங்காரத்தைப் பொறுத்தவரை செட்டாகக் கிடைக்கும் ஒரு கிராம் பிரைடல் நகைகளுக்குத்தான் மவுசு அதிகம்.

அதுவே வைர நகைகளின் பொலிவில் லேட்டஸ்ட் மாடல் நகைகள் அணிய நினைத்தால், இருக்கவே இருக்கிறது ஜெர்கான் கற்கள் பதித்து, பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்ட நகைகள். நாம் முன்பே குறிப்பிட்டிருந்த ஜோதிகாவின் திருமண செட் போன்ற கலெக்ஷன்ஸ்தான் இன்றும் பிரபலமாக இருக்கிறது. ஒரே ஒரு பெரிய நெக்லெஸ்சும், காதணிகளும், நெத்திச் சுட்டியும் மட்டும் அணிந்தாலே ரிசப்ஷன் டிரஸ்ஸிங் களைக்கட்டிவிடும். எந்த நகைகள் அணிந்தாலும், முக்கியமாக கழுத்தில் உள்ள பூமாலை சன்னமாகவும், நகைகளை மறைத்துக் கொள்ளாமல், சற்று அகண்டு இருக்குமாறும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

காலை சுப முகூர்த்ததிற்கு என்ன நகைகள் என்று பார்க்கலாமா? முகூர்த்தம் என்றாலே பாரம்பரிய பட்டுப் புடவைதான் உடுத்துவோம் என்ற காரணத்தால், மாடர்ன் மற்றும் ஃபேன்ஸி நகைகளைத் தவிர்த்து கலாச்சார நகைகளை அணிய வேண்டும். சுமாராக 80% பெண்கள் அணிவது கெம்புக் கல் பதித்த “டெம்பிள் ஜூவல்லரிதான். இது கவரிங் மற்றும் வெள்ளியிலும் கிடைக்கிறது. இதில் காலங்காலமாய் வரும் அதே பட்டை சுட்டி, ஒற்றை சுட்டி, குடை ஜிமிக்கி, அட்டிகை, மயில் ஆரம் அல்லது மாங்காய் ஆரம் போன்றவற்றைப் போட்டுப் போட்டு அலுத்துவிட்டிருக்கலாம். என்னிடமே பலர் இதே கருத்தைச் சொல்வதால், தற்போது அசல் தங்கத்தில் வரும் “செட்டி நாட்டு ஆண்டிக்” நகைகள் போன்று ஒரு கிராம் தங்கத்தில் விதவிதமாக டிசைனிங் செய்து கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி நகைகள் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரிஜினல் கெம்புக் கற்கள் பதிக்கப்பட்ட “கெஜல் ஆரங்கள், பதக்கங்கள், காப்புகள், ஜடை வில்லைகள், கெம்பு ஒட்டியாணம், மற்றும் வங்கிகள் என ஒரு செட்டாக அணியலாம். “கெம்புக்கல்” நகைகளை விரும்பாதவர்கள் நஹாஸ் வேலைப்பாட்டில் செய்யப்பட்ட பிளையின் செட்டுகளையும் அணியலாம். எந்த நகைகளைத் தேர்வு செய்தாலும், உச்சி முதல் பாதம் வரை ஒரே செட்டாக இருந்தால் பார்க்க சீராக, அழகாக இருக்குமல்லவா?…

திருமணங்களில் இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் “ட்ரெண்ட்” “தீம்-கலரிங்”தான். அதாவது மணமகளின் புடவைக்கு மேட்சாக மணவறையின் “பேக்-ட்ராப்”, மாப்பிள்ளையின் சர்ட், லைட்டிங்ஸ், மாலைகள் போன்ற எல்லாவற்றையும் அமைப்பதுதான் இது! இத்தனையும் மேட்சாக இருக்கும்போது, நகைகளை மட்டும் விட்டுவிடுவோமா என்ன?!

குந்தன் நகை-செட் என்று பார்த்தால் வெள்ளை நிற குந்தன் கற்களுடன் வண்ண பீட்ஸ்கள் சேர்த்து சோக்கர், ஆரம், இயர்செட், சுட்டி, ஒட்டியாணம், வங்கி, விரல்களில் அணியும் ஃபிங்கர்செட், ஹிப் செயின், கொலுசுகள், மெட்டி, கடா வளையல், ஜடை செட், குஞ்சம் அத்தனையும் புடவையின் நிறத்துக்குப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும். புடவையில் கற்கள் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தால் இந்த வகை நகைகள் பொருத்தமாக இருக்கும். மணப்பெண்ணின் தோற்றத்துக்குப் பொருந்துமேயானால், அகலமான, “ஜோதா அக்பர்” நெக்லெஸ்களையும் கூட அணியலாம்.

Related posts

குளிர்காலத்திற்கான மேக் அப் குறிப்புகள்

nathan

பெண்களுக்கு அழகு தரும் தாவணி, ரெட்டைஜடை, மல்லிகைப்பூ

nathan

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில ஐடியாக்கள்…

nathan

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

nathan

Bridesmaids Sarees : Simple Sarees

nathan

பெண்களின் அழகை மேலும் ஜோலிக்க வைக்கும் ஆபரணங்கள்…..

sangika

பெண்கள் விரும்பும் தங்க ஆபரணங்கள் இவைதானாம்!

sangika

இவைகளை அறவே தவிர்த்து, இல்ல‍றத்தை நல்ல‍றமாக்கி, வளம் பெற…..

sangika

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்……

sangika