29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
iuju
தலைமுடி சிகிச்சை

உங்கள் முடியை அடர்த்தியாகவும் மென்மையாகவும் மாற்றி ஈரப்பதத்துடன் வைத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எத்தனையோ ஷாம்பூகளை நீங்கள் மாற்றி இருப்பீர்கள் ஆனால் எந்த மாற்றமும் நிகழ வில்லையா? அப்போது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத முறையில் சில ஹேர் மாஸ்க்கை கடைப் பிடியுங்கள்.

இப்போது கடைகளில் கிடைக்கும் ஷாம்பூகளில் பலவகை இரசாயனங்கள் கலந்து இருக்கும்.

இதனால் உங்கள் முடி கொட்டுதல், அடிக்கடி பூச்சி வெட்டு ஏற்படுதல், விரைவில் நரை முடி வருதல், போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இயற்கையான ஆயுர்வேத முறையை நீங்கள் பின்பற்றலாம். ஆயுர்வேத முறையை நீங்கள் பின்பற்றும் போது உங்கள் முடியை அடர்த்தியாகவும் மென்மையாகவும் மாற்றி ஈரப்பதத்துடன் வைத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த ஆயுர்வேத ஹேர் கேர் உங்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அவை என்னென்ன பொருட்கள் என்பதைப் பார்க்கலாம்.

நெல்லிக்காய் மற்றும் சீயக்காய்

நெல்லிக்காய் மற்றும் சீயக்காய் இவை இரண்டும் உங்கள் தலையில் இருக்கும் பொடுகை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ளது. இது பொடுகை அகற்றுவது மட்டுமில்லாமல் தலையில் இருக்கும் அழுக்குகளை நீக்கி தலையைச் சுத்தமாக வைக்க உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் உங்கள் முடியை ஈரப்பதத்துடன் வைத்து முடியின் வேர்ப்பகுதியை உறுதியானதாக மாற்றி விரைவில் நரை முடி ஏற்படாமல் பாதுகாக்கும். 1 கப் நெல்லிக்காய் தூள் மற்றும் ½ கப் சீயக்காய்த்தூள் இரண்டையும் ஒன்றாக நீரில் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்து ஒருமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை விட்டுவிட்டு பின்னர் அலசுங்கள்.

வெந்தயம்

வறுத்த வெந்தய தூள் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் நெல்லிக்காய் தூள் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வையுங்கள். அடுத்தநாள் காலையில் எழுந்து அந்த கலவையை எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் உலர விட்டு பின்பு அலசுங்கள். இதனை நீங்கள் வரம் ஒரு முறை செய்யலாம்.

வேப்பிலை

வேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளது. இது உங்கள் தலையில் கொப்புளங்கள் இருந்தால் அதனை எதிர்த்துப் போராடும். இது கொப்புளங்களுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் பொடுகினையும் நீக்குகிறது. ஒரு கை முழுவதுமாக வேப்பிலை இலைகளை எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வையுங்கள். அடுத்தநாள் காலையில் அந்த இலைகளை எடுத்து அரைத்து அத்துடன் நான்கு தேக்கரண்டியளவு நெல்லிக்காய் தூள் சேர்த்துக் கலக்கி உச்சந்தலை மற்றும் முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதில் உதவும். அத்துடன் பொடுகை நீக்கவும் முடியின் அடர்த்தியை அதிகரிக்கவும் நெல்லிக்காய் உதவும். நெல்லிக்காயை எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனை எடுத்து முடியின் வேர்களில் படுமாறு தேய்த்து அரை மணி நேரம் உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள்.

ரீத்தா

உங்கள் முடியை வேகமாக வளர வைப்பதற்கு மிகச்சிறந்த மற்றும் எளிமையான வழி ரீத்தா. அதாவது இதனை சோப்புத்தூள் என்று கூறுவார்கள். இந்த ரீத்தா மற்றும் நெல்லிக்காய் இரண்டும் உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ரீத்தா மற்றும் நெல்லிக்காய் தூள் இரண்டும் சேர்த்து இரவு முழுவதும் ஊரவைத்து விட்டு அடுத்த நாள் காலையில் அடுப்பில் வைத்துக் கொதிக்க வையுங்கள். நன்றாகக் கொதித்து நீர் சற்று வற்றிய பின்னர் அதனை எடுத்து ஆற வைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இந்த குளியலின் போது உங்களுக்கு ஷாம்பூ தேவையில்லை. ரீத்தாவில் இயற்கையாக அழுக்கைப் போக்கும் தன்மையை கொண்டுள்ளது. எனவே நீங்கள் ஷாம்பைப் பயன்படுத்தாமல் அலசுங்கள். ரீத்தா உங்கள் முடி உதிர்வைக் குறைத்து முடியின் வேர்களை உறுதியாக்க உதவுகிறது. இந்த முறையையும் நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

வல்லாரை கீரை

வல்லாரை கீரை உடல் ஆரோக்கியத்திற்கும் புண்களை ஆற்றுவதற்கும் பயன்படும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த கீரை முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவுதாம். வல்லாரை கீரை எடுத்து நன்றாகக் கழுவி மிக்ஸியில் போடு அரைத்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வல்லாரை கீரை பொடியை எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். இந்த முறை உங்கள் முடியை அடர்த்தியாக மற்றும் உறுதியாக மாற்றும்.

வல்லாரை மற்றும் நெல்லி

வல்லாரை மற்றும் நெல்லி இரண்டும் வைட்டமின் சி அதிகமாக உள்ளடக்கி உள்ளது. இவை உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். மூன்று கப் தண்ணீரில் வல்லாரை கீரை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் இரவு முழுவதும் ஊற வையுங்கள். மூன்று கப் தண்ணீர் அறை கப் தண்ணீராக மாறும் வரை கொதிக்க வையுங்கள். பின்னர் ஆற வைத்து தலையில் தேய்த்து முடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்து 40 நிமிடங்கள் விட்டு தண்ணீரில் அலசுங்கள்.

செம்பருத்தி

செம்பருத்தியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்கள் முடி உதிர்தலுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க உதவும். செம்பருத்தி உங்கள் முடி வளர்ச்சியை அதிகரித்தல், விரைவில் நரை முடி வராமல் பாதுகாத்தல், மற்றும் பூச்சி வெட்டுகள் போன்ற முடி சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க உதவும். மூன்று தேக்கரண்டியளவு செம்பருத்தி பவுடர், 1/4 கப் தயிர், இரண்டு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் கலந்து கலவையாகக் கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாகக் கலந்து முடியில் 20 நிமிடங்கள் வைத்து அலசுங்கள். மேலும் இதை வாரத்தில் ஒரு நாள் செய்யுங்கள். இதில் உங்களுக்கு ஏற்ற முறையைச் செய்து உங்கள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தி அடர்த்தியான முடியைப் பெற்று மகிழுங்கள்.

Related posts

உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? அப்ப இத படிங்க!…

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயத்தை பயன்படுத்துவது எப்படி?

nathan

கூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா?

nathan

பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலை பெற

nathan

இளநரையை போக்கும் சீயக்காய்

nathan

தினமும் 100 முடி உதிர்ந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

nathan

பொடுகுக்கு முற்றுப்புள்ளி!

nathan

உங்களுக்கு கூந்தலில் கெட்ட நாற்றம் வருகிறதா? இத ட்ரைப் பண்ணி பாருங்க….

nathan

பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan