25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அசைவ வகைகள்

வான்கோழி வறுவல் -வீடுகளில் செய்து சுவைக்கலாம்.

நீங்கள் வான்கோழி பிரியாணியை சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி வறுவலை சுவைத்ததுண்டா? ஆம், எப்படி வான்கோழி பிரியாணி சுவையாக இருக்குமோ, அதேப்போல் வான்கோழி வறுவலும் ருசியாக இருக்கும். அதிலும் இந்த வறுவல் செய்வதென்பது மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட இதனை தங்கள் வீடுகளில் செய்து சுவைக்கலாம்.

உங்களுக்கு வான்கோழி வறுவலை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு வான்கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Vaan Kozhi Varuval Recipe
தேவையான பொருட்கள்:

வான்கோழி – 1/2 கிலோ
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்ழுன்
தண்ணீர் – 1 கப்

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப் (துருவியது)
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 5

மசாலாவிற்கு…

தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் வான்கோழியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

பின் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் வான்கோழியை சேர்த்து, நன்கு நிறம் மாறும் வரை வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு சிறிது நேரம் பச்சை வாசனை போக கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பரிமாறினால், சுவையான வான்கோழி வறுவல் ரெடி!!!

Related posts

சைனீஸ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி

nathan

ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி

nathan

சூப்பரான சிக்கன் பட்டர் மசாலா

nathan

சுவையான பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு

nathan

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட்

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan

சுவையான செட்டிநாடு நாட்டுக்கோழி வறுவல்

nathan

கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு

nathan