அலர்ஜிகளிலிருந்து சருமத்தை பாதுகாக்க மஞ்சள் ஒரு சிறந்த பொருள்.
இதில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் அலர்ஜியில் இருந்து சருமத்தை காப்பதோடு பொலிவடையவும் செய்கிறது.
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் வெள்ளரிக்காய் பேஸ்ட்டை சேர்த்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட்டு 10 நிமிடம் விட்டு நன்றாக காய்ந்ததும் கழுவி விட வேண்டும். அது போல் கற்றாழையும் சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதாவது கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது.
சரும சுருக்கங்கள் மற்றும் வேறு பாதிப்புக்கள் ஏற்படாமல் தடுக்க, வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினம் செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
மேலும் பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். அதே போல் பன்னீர் மற்றும் சந்தனத்துடன் உலர்ந்த ரோஜா இதழ்களைச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகம் பொலிவுபெறும்.
வேப்பிலை மற்றும் வெள்ளரிகாயையும் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், சருமம் மிளிரும்.