25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
04 1435995606 vazhakaichops
சைவம்

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்

வாழைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய வாழைக்காய் வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் என்று பலரும் இதனை அதிகம் உணவில் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவற்றை சேர்க்க வேண்டியது அவசியம்.

இதனால் வாய்வு தொல்லை ஏற்படாமல் இருக்க, சமைக்கும் போது பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டால் போதும். இங்கு வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!!


04 1435995606 vazhakaichops
தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு…

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 4-5 பல்
மிளகு – 2-3 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை நீள நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் வாழைக்காயைப் போட்டு பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அந்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் வாழைக்காயைப் போட்டு 3 நிமிடம் பிரட்டி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமெனில் சிறிது உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெடி!!!

Related posts

மஸ்ரூம் சிக்கன் மசாலா: வீடியோ இணைப்பு

nathan

ஸ்பைசியான பன்னீர் 65 செய்வது எப்படி

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan

சைவ பிரியர்களுக்கான காளான் சாதம்

nathan

சப்பாத்தி உப்புமா

nathan

சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் குருமா

nathan

கத்தரிக்காய் மசாலா

nathan

கும்மூஸ் ( HUMMOOS )

nathan