வெந்தயத்தைக் கொண்டு சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.
சரி, இப்போது வெந்தயம் எந்த சரும பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வளிக்கும் என்பதையும், அப்பிரச்சனைகளைப் போக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
சிறந்த கிளின்சர்
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும். அதற்கு வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
பொலிவான முகம்
பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவாக்க நினைத்தால், வெந்தய ஃபேஸ் பேக் போடுங்கள். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சருமத்தை வெள்ளையாக்கும்
வெந்தயத்தைக் கொண்டும் சருமத்தை வெள்ளையாக்கலாம். அதற்கு வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 1-2 முறை போடுவது நல்லது.
பருக்களைத் தடுக்கும் வெந்தயம்
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். அதற்கு வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.
ஆன்டி-ஏஜிங் பேக்
முதுமையைத் தள்ளிப் போட நினைப்பவர்க்ள், வெந்தயத்தை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் தெரியும் முதுமை தோற்றத்திற்கான அறிகுறிகள் அனைத்தும் தடுக்கப்படும்.
வெயிலால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தை நீக்கும்
வெயிலில் நீங்கள் அதிகம் சுற்றி, அதனால் உங்கள் சருமத்தின் நிறம் பழுப்பு நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம், கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.