வெல்லத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். மேலும் வறுத்த உப்புக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் நாம் அறிந்திருப்போம். ஆனால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..
உப்ப கடலையுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவது உடலின் ரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ரத்த சோகை பிரச்சனையை அகற்ற உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இதனால் அதிக நன்மைகள் ஏற்படுகிறது.
வறுத்த உப்பு கடலையில் இரும்பு மற்றும் புரதச் சத்தும் வெல்லத்தில் இரும்புச் சத்தும் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதன் மூலம் உடலில் இரும்பு மற்றும் புரதத்தின் குறைபாடு பூர்த்தி செய்யப்படுகிறது.
எலும்புகளை வலுப்படுத்த வெல்லம், உப்புக்கடலை ஆகியவற்றை ஒன்றாக உட்கொள்ளலாம். வயதானதால் எலும்புகள் வலுவிழக்கத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் வலிமையை பராமரிக்க உப்புக்கடலையை வெல்லத்துடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
வெல்லம் மற்றும் உப்புக்கடலை ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை இதை சாப்பிடுவதால் நிவாரணம் கிடைக்கும்.