f
தலைமுடி சிகிச்சை

ஆண்களே வழுக்கைத் தலையில் முடி வளரனுமா?

பொதுவாக ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை.

 

வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதனால் பலரும் மன உளைச்சலுடன் காணப்படுகிறார்கள்.

 

மரபணு காரணங்களால் பரம்பரையாகச் சிலருக்கு முடி உதிர்தல், வழுக்கை ஏற்படுகிறது.

 

இதனை ஆரம்பத்திலே ஒரு சில இயற்கை வழிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். தற்போது அவை என்னென் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

  • வெங்காயத்தை வெட்டி, அரைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இது முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவற்றையும் அழிக்கும்.
  • விளக்கெண்ணெயை விரலால் தொட்டு, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடி வேகமாக வளர ஊக்குவிக்கும்.
  • கற்றாஜை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இது முடியின் வேரில் அடைபட்டிருக்கும் துளைகளைத் திறக்கும்.
  • இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலசி வந்தால், அது முடியின் வளர்ச்சிக்கு உதவும். விருப்பமுள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் முடி இல்லாத இடத்தில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலச வேண்டும்.
  • வழுக்கையைப் போக்க எலுமிச்சை சாற்றினை எந்த எண்ணெயுடனும் சேர்த்து, தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து தலைமுடியை அலசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • மருதாணி இலைகளையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும், அந்த இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் அதிக பலன் கிடைக்கும்.

Related posts

பேன்களை போக்கும் வீட்டு சிகிச்சை

nathan

உங்க முடி அடிக்கடி சிக்கு ஆகுதா? இதோ சில வழிகள்!

nathan

கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சில டிப்ஸ் –

nathan

கூந்தலின் எதிரி ஈரம்

nathan

கூந்தல் வளர்ச்சியை ஷாம்பு அதிகப்படுத்துமா?

nathan

முடி கொட்டும் பிரச்சனைக்கான சில சித்த மருத்துவ கிச்சைகள்…!

nathan

முடி அடர்த்தியாக வளர…. இய‌ற்கை வைத்தியம்

nathan

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

nathan

ஹேர் மாஸ்க்கை மட்டும் நைட் யூஸ் பண்ணுனீங்கனா… உங்களுக்கு முடி கொட்டவே கொட்டாதாம்!

nathan