29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
men face pack 1
முகப் பராமரிப்பு

ஆண்களே உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

பொதுவாக இன்றைய காலத்தில் பெண்களைப் போலவே ஆண்களும் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறைக் கொண்டுள்ளனர்.

ஆண்களுக்கு போதுமான நேரம் கிடைக்காததால் அல்லது சோம்பேறித்தனத்தால், அவர்களால் தங்கள் சருமத்திற்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க முடிவதில்லை.

 

இதனால் சில ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள்.

இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது. இதற்கு ஒரு சில இயற்கை வழிகள் கூட உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சரும கருமையைப் போக்க ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் அல்லது கருமையான பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
சரும நிறத்தை அதிகரிக்க ஒரு பௌலில் நற்பதமான தக்காளி சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் முகம், கை, கால் பகுதியில் தடவி 20 நிமடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
சருமத்தின் கருமையை நீக்க வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, சருமத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தைக் கழுவ வேண்டும். வேண்டுமானால், வெள்ளரிக்காய் சாறுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
கருவளையங்களைப் போக்க .உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்து, அதை பாதிக்கப்பட்ட கருமையான பகுதிகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும்.
சரும நிறத்தை மேம்படுத்தவும், சருமத்தை மென்மையாக்கவும் 2 டீஸ்பூன் ஓட்ஸை மோரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கை, கால்களில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
சருமம் பிரகாசமாக ஜொலிக்க 3 டீஸ்பூன் துவரம் பருப்பை நீரில் சில மணிநேரம் ஊற வைத்து, பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் தக்காளி சாறு சேர்த்த கலந்து, கருமையாக உள்ள முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது

nathan

ஸ்பெஷல் ஃபேஷியல்

nathan

இதனை தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகள் உடனே நீங்கும்.

nathan

சூப்பர் டிப்ஸ்! முகப் பருக்கள் மற்றும் தேமலை போக்கும் மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்…!

nathan

உங்க முகத்தை எப்போதும் இளமையுடன் வைத்துகொள்ள வேண்டுமா ?? அப்ப இத படிங்க! !!

nathan

முகம் உடனடியாக ஜொலிக்க இந்த 5 வழிகளை யூஸ் பண்ணுங்க !!

nathan

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி

nathan

சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் தெரியுமா?இதை படிங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சிவப்பழகை பெற

nathan