26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
help
Other News

எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும்..?தெரிஞ்சிக்கங்க…

தானம் தலை காக்கும் என்று சொல்வார்கள்.. அந்த வகையில் நாம் இப்போது செய்யும் ஒரு தானமானது கடைசியில் ஏதோ ஒரு நேரத்தில் நம்மையும் நமது வம்சத்தினையும் காக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் தானம் அளிப்பதினால் உங்களுக்கு அப்போதே மகிழ்ச்சி உண்டாகிறது.

வீட்டில் சாப்பாடு, குழம்பு, பொரியல், ரசம் என வகைவகையாக சமைத்து வைத்து விட்டு வருபவர்களுக்கு தானம் அளிப்பதை காட்டிலும், இல்லாதவர்களுக்கு தானம் அளிப்பதே மிக சிறந்த ஒரு விஷயமாகும். ஒரு வேளை சாப்பாடு எங்காவது கிடைக்குமா என்று ஏங்கி தவிக்கும் ஏழைகளுக்கு தானம் கொடுப்பதை விட சிறந்தது எதுவும் கிடையாது என்று கூறலாம்.

ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த இந்த பொருட்களை தானம் அளிப்பதால் வாழ்வில் எல்லா மகிழ்ச்சிகளும் பெற்று இன்பமாக வாழலாம். இந்த பகுதியில் அவரவர் ராசிக்கு ஏற்றது போல என்தெந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெருங்கள்.

மேஷம்:

குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டியது அவசியமாகும். சிவன் கோவில்களுக்கு சென்று வரும் போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் மனது குளிர்ந்து உங்களது வீட்டில் அனைத்து வகையான செல்வங்களும் தங்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். திருமணம் செய்து வைப்பது என்பது ஒரு பாக்கியம் ஆகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் உங்களுக்கு கிடைப்பது உறுதி.

மிதுனம்:

நமது முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டியது அவசியமாகும். மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லா வித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது

கடகம்:

பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்கின்றனர். கடக ராசிக்காரர்கள் பசு மாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும். உங்களது வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். இதனால் தெய்வங்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்:

குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை (கூட்டஞ்சோறு) அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.

பசுவிற்கு அகத்திக்கீரை
பசு நம் தாய்க்கு ஒப்பானது. தன்னை வருத்தி தம் குழந்தையை ஒரு தாய் காப்பது போல பசு தமது கன்றுக்காக கொடுக்க வேண்டியது பாலை நமக்கு அளித்து நம்மை காப்பாற்றும் ஒரு சாதுவான ஜீவன்..! ஈறேழு பதினான்கு உலகங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வாசம் செய்கின்றனர் என்று புராணம் கூறுகிறது.

எனவே நம்மால் இயன்ற வரையில் பசுவிற்கு நாம் பாதுகாப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசி கலந்த வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை பசுவின் வாய் அளவாவது கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

பயன்கள்
அருகம்புல் கொடுத்தால் பயம் அலலும், அகத்திக்கீரை கொடுத்தால் சரிவர பிதுர்கடன் செய்யாத தோஷங்கள் அகலும். வாழைப்பழம் அல்லது அரிசி கலந்த வெல்லம் கொடுத்தால் நம்மை பிடித்த தரித்திரம் நீங்கி லஷ்மி கடாஷம் கிடைக்கும். – Source: Maalaimalar

Related posts

கேரளாவில் ஒரே நேரத்தில் அரசுப் பணிக்கு தேர்வான அம்மா-மகன்!

nathan

BMW கார் வாங்கிய இயக்கினார் லோகேஷ் கனகராஜ்!

nathan

5-வது ரேங்க் உடன் ஐஏஎஸ் ஆன ஸ்ருஷ்டியின் வெற்றிக் கதை!

nathan

மாதவிடாய் இரத்தம் குறைவாக வந்தால்

nathan

9 வயதிலே கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்!

nathan

சிறுவனிடம் எல்லைமீறிய கவர்ச்சி நடிகை!!

nathan

காதலரை கழட்டி விட்ட பிக்பாஸ் ஆயிஷா!

nathan

விமானத்தை தரையிறங்க விடாத தெரு நாய் : நடந்தது என்ன?

nathan

சூடேத்தும் தர்ஷா குப்தா.. இணையத்தை கலக்கும் கிளாமர் வீடியோ

nathan