22 61dfd9fc4
முகப் பராமரிப்பு

உங்களுக்கு வறண்ட சருமமா? அசத்தலான 7 டிப்ஸ்

பொதுவாக வறண்ட சருமம் என்பது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் பலரும் வீட்டை விட்டே வெளியே செல்வதை தவிர்க்கின்றனர்.

சிலருக்கு அனைத்து காலங்களிலுமே வறண்ட சருமம் பிரச்சனை உள்ளது.குறிப்பாக இதனை குளிர்காலத்தில் கவனிக்கத் தவறி விட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும்.

ஒருவருக்கு வறண்ட சருமம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. தினசரி குளியல் பழக்கம் முதல் குளிர்கால வானிலை வரை, உங்கள் சருமம் அனைத்தையும் எதிர்கொள்ளும்.

எனவே எளிமையான முறையில் சரும பிரச்சனையை சரி செய்யும் சில வழிமுறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி,சிறிது நேரம் உலரவைத்து, பின்பு நன்கு கழுவினால், முகப்பொலிவை உணரலாம்.

தயிரை நன்கு கலக்கி அதனுடன் உருளைக்கிழங்கை அரைத்துப் பிழிந்து சாறாக்கிக் கலந்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தைக் கொஞ்சம் சூடான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் தக்காளி சாறை பிழிந்து அதை முகத்தில் தடவி உலர வைத்து, பின்பு அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் உரியப் பலனை உணர்வீர்கள்.

வெண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நீரில் கழுவினால், வறண்ட சருமம் நீங்கும்.

சூட்டைத் தணிக்க வெள்ளரிதான் பெஸ்ட். வெள்ளரியைத் துண்டு துண்டாக நறுக்கி முகத்தில் தடவி உலர வைக்கலாம்.

பச்சை முட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதனுடன் தேனைக் கலந்து முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும்.பின்பு நன்கு சோப்பு போட்டுக் கழுவிவிட வேண்டும்.

அரிசி மாவுடன், வெள்ளரிச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால், வறண்ட சருமத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

Related posts

ஒரே இரவில் முகப்பருக்களைப் போக்க மாடல்கள் என்ன செய்வாங்க-ன்னு தெரிஞ்சுக்கணுமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… கரும்புள்ளிகள் முதல் பருக்கள் வரை, உடனே தீர்வுக்கு கொண்டு வர #நச்சுனு 7 டிப்ஸ்..!

nathan

நீங்கள் ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

முகம் மற்றும் உடல் சத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்!…

sangika

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

nathan

‘இந்த’ ஆயுர்வேத பியூட்டி டிப்ஸ் மட்டும் நீங்க ஃபாலோ பண்ணா…

nathan

மு‌க‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌ம் ‌தீ‌ர்வுகளு‌ம்

nathan

காலை முதல் மாலை வரை உங்கள் முகம் புத்துணர்வோடு இருக்க சூப்பர் டிப்ஸ் !!

nathan

பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும் முகத்தைப் பொலிவாக்க உதவும் பொருட்கள்!

nathan