27.5 C
Chennai
Saturday, Dec 28, 2024
03 1422948283 mushroom pepper fry
அசைவ வகைகள்

சுவையான மஸ்ரூம் பெப்பர் ப்ரை

மதிய வேளையில் நொடியில் மிகவும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதிலும் உங்கள் வீட்டில் காளான் இருக்கிறதா? அப்படியெனில் அதனைக் கொண்டு பெப்பர் ப்ரை செய்யுங்கள். இது மிகவும் சுவையான மற்றும் காரமான ஒரு சைடு டிஷ். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடும்படி இருக்கும்.

சரி, இப்போது அந்த மஸ்ரூம் பெப்பர் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா…!

Mushroom Pepper Fry Recipe
தேவையான பொருட்கள்:

காளான் – 1 கப் (நறுக்கியது)
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் – 1/2 (நீளமாக வெட்டியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக வெட்டியது)
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகை போட்டு 2-3 நிமிடம் நெல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் காளானை சேர்த்து பிரட்டி விட வேண்டும். காளான் தண்ணீரை வெளிவிடும் போது, அதில் மிளகுத் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் மீண்டும் 5-7 நிமிடம் நன்கு மசாலா காளானுடன் ஒன்று சேரும் வரை பிரட்டி, பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கிளறி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் மஸ்ரூம் பெப்பர் ப்ரை ரெடி!!!

Related posts

நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

மட்டன் சில்லி ஃப்ரை

nathan

இலகுவான மீன் குழம்பு

nathan

ஆட்டிறச்சி கறி

nathan

பட்டர் சிக்கன் செய்யலாம் வாங்க…

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan

சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு

nathan

நாட்டு ஆட்டு குருமா

nathan

இறால் வறுவல்: செய்முறைகளுடன்…!

nathan