25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
9 1521013895
முகப் பராமரிப்பு

செயற்கை கண்ணிமைகளை வச்சிக்கிட்டா இப்படித்தான் ஆகும்…

செயற்கை கண் இமைகளை பயன் படுத்துவதை நிறுத்தியது ஏன் ..? பெண்கள் கூறும் உண்மைகள்.

செயற்கை கண் இமைகள் பொருத்திக்கொள்வதில் நண்மைகள், தீமைகள் என இரண்டும் கலந்துள்ளது . மேலும் இரு தரப்பிலும் வலுவான வாதங்களும் முன்வைக்கப்படுகிறது. இருந்தாலும் “செயற்கை கண் இமைகளை கண்ட உடனேயே, நான் இதனை பொருத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து விட்டேன் “என்று கூறும் பெண்கள்தான் அதிகம்.

ஆனால் அப்படி பார்த்தவுடன் பொருத்திக்கொண்ட பலர், சில மாதங்களிலேயே தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர். அவ்வாறு செயற்கை கண் இமைகளின் பயன்பாட்டை நிறுத்தியதற்கு கூறப்படும் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

இயற்கை கண் இமைகளை இழக்க நேரிடும் .

செயற்கை கண் இமைகளை பொருத்திக் கொள்பவர்களுக்கு கண் பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பல பேருக்கு நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கையாக வளரும் இமை மயிர் பலமாக சேதமடைந்து உதிர்ந்து விடும். சிலருக்கு நோய் தொற்று ஏற்படாவிட்டாலும் தொடர்ச்சியாக செயற்கை கண்ணிமைகள் பயன்படுத்துவதால் இயற்கையாக வளரும் கண் இமைகள் கொட்டி, அதன்மேல் செயற்கை இமைகள் கூட பொருத்த முடியாமல் போகலாம்.

நல்ல கண் இமைகள் பொருத்துபவர் கிடைப்பது கடினம்

கடந்த ஒரு வருடங்களாக செயற்கை கண் இமைகளை பயன்படுத்தி வரும் 23 வயது ஜேமி கூறுகிறார். செயற்கை கண் இமைகள் நமக்கு நாமே பொருத்திக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக சிறப்பு அம்சம் கொண்ட பார்லர்கல் உள்ளன . எல்லா பார்லர்களிலும் இதற்கான சிறப்பு வசதிகள் கிடைப்பதில்லை இல்லை. வெகு சில பார்லர்களில், அதிலும் வெகு சிலபேர் மட்டுமே செயற்கை கண் இமைகள் பொருத்துவதில் கற்றுத் தேர்த்தவர்களாக உள்ளனர் . அவர்களிடம் நேரம் கிடைப்பதும் அரிதினும் அரிதாகவே இருக்கும் .

பராமரிப்பு மிக அதிகம்

கார்கள் வாங்குவதை விட, அவற்றை பராமரிப்பது மிக மிக கடினம். அது போல்தான் தான் செயற்கை கண் இமைகளைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதற்கென தனியாக பிரஷ் வைத்து கோதி விட வேண்டும். தண்ணீரில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை செய்யாவிட்டால் ஆரோக்கியம் மட்டுமல்ல. அதனால் உண்டாகும் அழகும் கெட்டுவிடும்.

வலி நிறைந்தது

செயற்கை கண் இமைகள் பொருத்துவது மிகுந்த வலி நிறைந்தது. இரண்டு மணி நேரங்களுக்கு மேல் அசையாமல் படுத்திருக்க வேண்டும். முதல் ஒரு மணி நேரம் சற்று தாக்கு பிடித்துவிட்லாம். ஆனால் அடுத்த ஒரு மணி நேரம் அதோகதி தான்.

மஸ்காராவே போதும்

மஸ்காரா பயன்படுத்துவதே போதுமான அழகை கண்களுக்கு அளிக்கிறது. கண் இமைகள் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் அழகு, வெறும் மஸ்காராவிலேயே கிடைக்கிறது. இன்றைய தேதியில் மஸ்காராவின் ரகங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன.

கண்ணாடி அணிபவர்களுக்கு ஏற்றதல்ல.

கண் கண்ணாடி அணிபவர்கள் கட்டாயம் செயற்கை கண் இமைகள் பொருத்தக்கூடாது. அது பொருத்தமானதான இருக்காது. ஆரோக்கியமாகவும் இருக்காது. கண் இமைகள் சற்று பெரிதாக இருப்பதால் கண்ணாடியில் பட்டு சுருண்டுவிடுவதும், உருத்தலை ஏற்படுத்துவதும் தொந்தரவாக இருக்கும். செயற்கை கண் இமைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.

மற்ற மேக்கப்களை இழக்க நேரிடும்.

கண் இமைகள் நீலமாக இருப்பதால் மற்ற மேக்கம் போடுவதோ, கண் மை வைத்துக்கொள்வதோ கூட முடியாமல் போகும். மேக்கப் போடுவது, பவுண்டேசன் கோட்டிங் கொடுப்பது என எந்த வித அழகுபடுத்தும் வேலைகளையும் நாம் நினைத்தது போல் செய்து கொள்ள முடியாது. செயற்கை கண் இமைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள நேரிடும்.

அனைவருக்கும் பிடித்தமானதல்ல.

செயற்கை கண் இமைகள் என்ன தான் பெண்களை மேலும் பெண்மை படுத்தி காட்டினாலும், கவர்ச்சியூட்டி காட்டினாலும் அவை அனைத்து ஆண்களுக்கும் பிடித்தமானதல்ல. பலரின் முகத்தில் இது செயற்கை கண் இமைகள் என்பது எளிதில் தெரிந்து விடும். பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் அதை விரும்புவதில்லை.

அதிக செலவு வைக்க கூடியது.

இது அதிக செலவும் கூட. செயற்கை கண் இமைகள் பொருத்துவது மட்டுமல்ல. அவற்றை பராமரிப்பது, தேவை இல்லை என்றால் அவற்றை அகற்றுவது என அனைத்துமே அதிக செலவு வைக்கக்கூடிய பணிகள் தான். சிக்கனமாக இருக்க விரும்பும் பெண்களுக்கு செயற்கை கண் இமைகள் உகந்ததல்ல.

சுய அபிமானத்தை தகர்க்கும்

உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால் இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை பராமரிப்புக்காக செல்ல வேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே செயற்கை கண் இமைகள் வெளியில் வர தொடங்கிவிடும். பார்க்க சற்று முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு காட்சி அளிக்கும். மேலும் இனி இது வேண்டாம் என அகற்றினாலும் இயற்கையாக இருக்கும் கண் இமைகள் பெரும் சேதம் அடைந்திருக்கும். எப்படி பார்த்தாலும் பெண்களுக்கு தன்னைப்பற்றிய சுய மதிப்பீடு, மற்றும் சுய அபிமானம் பெருமளவிற்கு சேதத்திற்குள்ளாகிவிடுகிறது

செயற்கை கண் இமைகள் பொருத்திக்கொள்வதன் மூலம் தன்னைப்பற்றிய சுய அபிமானம் பெரும் தாக்கத்துக்குள்ளாகிறது என்பது தன உண்மை …

Related posts

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan

முகம் ஜொலிக்கணுமா?

nathan

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

nathan

பெண்களே 30, 40 வயசானாலும் இளமையாக அழகாக காட்சியளிக்கணுமா?

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க முடி பளபளன்னு அடர்த்தியா வளர… மாம்பழ ஹேர் பேக்குகளை யூஸ் பண்ணுன்னா போதுமாம்!

nathan

வயதாவதை தடுக்கும் பேக் ,tamil beauty tips

nathan

முகப்பொலிவைத் தரும் இலைகள்

nathan

வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம்

nathan