26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Natural ways of caring for face beauty
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகு சாதனப்பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்

Courtesy: MaalaiMalar நவீனயுகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பெண்களின் வாழ்க்கைமுறை வேகமெடுத்திருந்தாலும், அழகு சாதனங்களால் அழகை ஆராதிப்பதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்க தவறுவதில்லை. எவ்வளவு அவசரமாக வெளியே கிளம்ப வேண்டி இருந்தாலும் ‘மேக்கப்’ போட்டுக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கு மனநிறைவு ஏற்படாது. முகமும் பொலிவு பெறாது.

பெண்கள் தங்களுக்கு பிடித்தமான மேக்கப் சாதனங்களை தேடிப்பிடித்து வாங்கும்போதும், பயன்படுத்தும்போதும் அதன் மூலம் வெளிப்படும் அழகுத்தன்மையை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். ஆனால் அவை கூந்தலுக்கும், சருமத்திற்கும் தீங்கு விளைவிக்காத, ரசாயன கலப்படமற்ற பொருட்களாக இருக்கவேண்டும். இதை பெரும்பாலான பெண்கள் கவனத்தில் கொள்வதில்லை. சிலரிடம் இதன் பின்விளைவுகளை பற்றிய விழிப்புணர்வும் இ்ல்லை.

வீட்டில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும், பலருக்கும் அழகு நிலையங்களுக்கு சென்று தங்களை அழகுபடுத்திக்கொண்டால்தான் மனநிறைவு ஏற்படுகிறது. ஆனால் எல்லா அழகு நிலையங்களிலும் சிறந்த பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்துவதில்லை. சில அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் விலை மலிவானவை. அவை பெரும்பாலான பெண்களுக்கு ஒத்துக்கொள்ளாது.

அதை பயன்படுத்திய சில மணி நேரங்களில் முகத்தில் அரிப்பு, கண்களில் எரிச்சல் தோன்றும். விலைஉயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினால் அத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படாது. கட்டணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் அதன் தரத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதனுள் ஆபத்து ஒளிந்திருக்கும்.

இதில் இன்னொரு பெரிய நெருக்கடி என்னவென்றால், பிரபலமான நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்புகள் மார்க்கெட்டுக்கு வருகின்றன. அதனால் உன்னிப்பாக கவனித்து அழகு சாதன பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லா விட்டால் உங்கள் முகத்தில் நீங்களே விழிக்க முடியாது. அந்த அளவுக்கு பக்க விளைவுகளால் முகம் பரிதாப தோற்றத்திற்கு மாறிவிடும். காசை கொடுத்து கஷ்டத்தை விலைக்கு வாங்கியது போல ஆகிவிடும்.

பிறகு என்னதான் செய்வது என்கிறீர்களா? மேக்கப் இல்லாமல் வெளியே போய்விட முடியுமா? என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதிலில் மவுனத்துடன் கூடிய புன்னகைதான் எட்டிப்பார்க்கும். ஏனெனில் இப்போதெல்லாம் ஆண்கள் கூட மேக்கப் போட்டுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். உச்சி முதல் பாதம் வரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான பல அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அவைகளில் போலிகள் எது என்று எப்படி கண்டுபிடிப்பது? என்ற குழப்பம் ஏற்படும்.

இது பற்றி உலகின் புகழ் பெற்ற அழகு கலை நிபுணர் ஷானாஸ் உசேன் முக்கிய தகவல்களை வழங்குகிறார்!

சிவப்பழகு கிரீம்: இது பெரும்பாலானோர் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருள். இதனை ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் பயன் படுத்தலாம். ‘அழகு என்பது சருமம் சிவப்பாக இருப்பதுதான்’ என்று நிறைய பேர் நினைத்துக்கொள்கிறார்கள். அந்த சிவப் பழகை பெற எவ்வளவு வேண்டுமானாலும் செலவளிக்க தயா ராகிவிடுகிறார்கள்.

சிவப்பழகு கிரீமில் ஹைட்ரோ க்யூனோன் என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது சருமத்தை மிருதுவாக்கும். மேற்புற பகுதியை பிளீச் செய்யும். அதனால் சருமம் சிவப்பாக மாறிவிட்டது போல் தோன்றும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சருமத்தின் அடர்த்தி குறைந்துகொண்டே போகும். அதனால் தசைகள் தளர்ந்துபோகும். சுருக்கங்களும் தோன்றக்கூடும். இந்த ரசாயனம் சில மாய்சரைசிங் கிரீம்களிலும் கலக்கப்படுகிறது. இது தவிர சிவப்பழகு கிரீம்களில் கலக்கப்படும் வேறு சில ரசாயனங்கள் புற்றுநோய் ஏற்படவும் வழிவகுக்கும். போலி தயாரிப்புகளில் ரசாயனங்களின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் பாதிப்பும் அதிகரிக்கும்.

லிப்ஸ்டிக்: இதில் பயன்படுத்தப்படும் காரியம் உதடுகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது இல்லாமல் லிப்ஸ்டிக் தயாரிக்க முடியாது. அதேவேளையில் இதன் அளவு குறைவாக இருக்க வேண்டும். பெரிய நிறுவன தயா ரிப்புகளில் இது குறைந்த அளவு சேர்க்கப்பட்டிருக்கும். அதனை கவனத்தில் கொண்டு லிப்ஸ்டிக் வாங்க வேண்டும். ஏனெனில் இதில் கலந்திருக்கும் காரியம் வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும். நாளடைவில் வயிற்றில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இது காரணமாகிவிடும்.

சோப் – டியோடரென்ட்: நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட் களாக சோப், டூத்பேஸ்ட், டியோடரென்ட் போன்றவைகள் உள்ளன. இவைகளில் ட்ரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிருமி நாசினி என்பதால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் அளவு அதிகரிக்கும்போது ஆபத்து நேரும். பற்பசையில் அதன் அளவு கூடும்போது அது நச்சுப் பொருளாகிவிடும். சோப் போன்றவற்றிலும் இதே நிலைதான். ட்ரைக்ளோசனின் தாக்கம் அதிகரிக்கும்போது சருமம் வறண்டு போகுதல், எரிச்சல், சருமம் நிறம் மாறுதல், அரிப்பு, நோய்த் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்கும்.

பாடி லோஷன்: உடலுக்கு பயன்படுத்தும் பாடிலோஷன்களிலும், வேறு பல கிரீம் களிலும் ‘ஆண்டிமைக்ரோபியல்’ எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. அதன் வீரியம் கூடும்போது பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை, விரைவில் பருவமடைதல், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது தவிர அலர்ஜி, ஆஸ்துமா, சொறி போன்ற பாதிப்புகளும் ஏற்டலாம்.

Related posts

உங்கள் சரும பிரச்சனையை போக்கும் சமையலறை பொருட்கள்!!

nathan

முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிர மஞ்சள் ஃபேஷ் பேக்…

nathan

சோடா உப்பினைக் கொண்டு அழகுக் குறிப்புகள் சில!

nathan

ஜொலிக்கிற சருமம் வேணும்னா சாமந்தி பூ ஃபேஸியல் பேக் ட்ரை பண்ணி பாருங்க!!

nathan

எலுமிச்சை தோலில் இவ்ளோ சத்து இருக்கு… எப்படி பயன்படுத்துவது?

nathan

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையத்தை போக்கும் எலுமிச்சை

nathan