Simple home treatment for hair loss SECVPF
தலைமுடி சிகிச்சை

பொடுகு பிரச்சனையால் றொம்ப அவதி படுகிறீங்களா;அப்போ இதை செய்யுங்கோ..!!

பொதுவாக பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல.

அதிலும் குளிர்காலங்களில் இந்த பொடுகு பிரச்னை மிகவும் அதிகமாக காணப்படும்.

 

பொடுகு தொல்லை பல்வேறு காரணங்கள் வருகின்றன. அதில் குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என முடியில் பொடுகு வர பல காரணங்கள் இருக்கின்றன.

 

இவற்றை ஒருசில பொருட்கள் கொண்டு எளியமுறையில் தீர்க்க முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

 

மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

Related posts

தெரிஞ்சுக்கங்க! குளிர்காலத்தில் அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

nathan

தல… குட்டும் பிரச்னைகள்… எட்டுத் தீர்வுகள்!

nathan

பெண்களே தலைமுடி உதிர்விற்கு ‘குட்-பை’ சொல்லணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு, அரிப்பிலிருந்து நிரந்தரமாக விடுதலை தரும் பாட்டி வைத்தியங்கள்!!

nathan

சொட்டையில் முடி வளர வேண்டுமா? இந்த வைத்தியத்தை யூஸ் பண்ணுங்க!!

nathan

பொடுகு பிரச்சனையில் இருந்து தலைமுடியை பராமரிக்க இந்த பொருள் போதும்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இயற்கை மருத்துவ குறிப்புகள்….! முடி உதிர்வதை தடுத்து வளர செய்யும்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருக்க தயிரை இப்படி பயன்படுத்தினாலே போதும்..!

nathan