27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
23 coveralbumfaces
சரும பராமரிப்பு

உங்கள் முகத்தின் வடிவம் உங்கள் பெர்சனாலிட்டியைப் பற்றி என்ன கூறுகிறது?தெரிஞ்சிக்கங்க…

ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை என கூறினாலும் பலர் இதன் மீது அலாதி நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். ஜோசியம் தான் நம்மை ஆட்டி வைக்கிறது என நம்புபவர்கள் ஏராளம். பல சாஸ்திரங்களுக்கு மத்தியில் சாமுத்திரிகா லட்சணங்களும் ஒன்றாகும். சாமுத்திரிகா லட்சணங்கள் அத்தனையும் அனைவருக்கும் இருந்து விடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அது அமையும். அதை வைத்தே அவர்களின் குணங்கள், பண்புகள் மற்றும் ஆளுமையை கணித்து விடலாம்.

ஒருவரின் குணங்களையும். ஆளுமையையும் தெரிந்து கொள்ள அவரின் ராசி நட்சத்திரம், பிறந்த தேதி மற்றும் நேர பலன், சாமுத்திரிகா லட்சணம், மற்ற உடலமைப்பு பல விஷயங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்று தான் முகத்தின் வடிவம். ஒருவரின் முகம் எந்த வடிவத்தில் உள்ளதோ அதை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்க முடியுமாம். ஆச்சரியமாக உள்ளதா? இதோ, முகத்தின் வடிவங்கள் என்னென்ன என்பதை பற்றியும் அதனால் ஒருவரின் ஆளுமை எப்படி அமையும் என்பதை பற்றியும் பார்க்கலாமா?

ஒருவரின் முகத்தை இத்தனை வடிவங்களாக பிரிக்கலாம். அவையாவன: இதய வடிவம், முட்டை வடிவம், வட்ட வடிவம், சதுர வடிவம், தலைகீழ் முக்கோண வடிவம் மற்றும் நீண்ட வடிவம்.

இதய வடிவம்

இதய வடிவிலான முகத்தை கொண்டவர்கள் உயர் சிந்தனைகளுடன், நேர்மை தவறாத நடத்தையுடனும், தாய்மை உள்ளத்துடனும் திகழ்வார்கள். அவர்கள் மிகவும் மென்மையானவர்களாக, நல்லுள்ளம் படைத்தவர்களாக, மெய்யுறு இன்பம் மற்றும் காதல் உணர்வு கொண்டவர்களாக விளங்குவார்கள். தங்கள் திறமையை தாங்கள் பார்க்கும் வேளையில் சிறப்பாக உபயோக்கிப்பார்கள். அதேப்போல் தனமும் அவர்களை சென்றடையும். அதனால் பணப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு அவர்களுக்கு எப்போதும் ஏற்படாது.

நீள்வட்டம்/முட்டை வடிவம்

முட்டை வடிவத்துடனான முகத்தை கொண்டவர்கள் அழகுடையவர்களாக, மென்மையானவர்களாக, புத்திசாலியாக, அறிவாளியாக, நடைமுறைக்கு ஏற்றவராக, ராஜதந்திர குணங்களுடன் இருப்பார்கள். இதனுடன் சமுதாயத்துடன் கலந்து பழகும் குணத்தையும் கொண்டிருப்பார்கள். அதனால் தான் அவர்களால் பலருக்கும் பல உதவிகள் கிடைக்கும். அதேப்போல் மற்றவர்களிடமும் இவர்களுக்கு பல உதவிகள் கிடைக்கும். சமநிலையை பராமரிக்கும் திறனை கொண்ட இவர்கள் ஒவ்வொரு தருணத்தையும் சந்தோஷமானதாக கருதுவார்கள். இவ்வகையானவர்கள் மிகவும் ஒழுக்கத்துடனும், கடின உழைப்பையும் கொண்டிருப்பார்கள் என அவர்களை சுற்றியுள்ளவர்கள் கருதுவார்கள். அது உண்மையே! வழக்கத்தை விட அதிகமாகவே இவர் உழைப்பார்கள்.

வட்ட வடிவம்

வட்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள் பிறரின் மத்தியில் மென்மையான அபிப்பிராயத்தை பெறுவார்கள். சொல்லப்போனால், பிறருடன் சுலபத்தில் இவர்கள் பழகி விடுவார்கள். வட்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள் அழகிய மற்றும் இளமையான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். அக்கறை, உணர்ச்சி, நேர்மை, தோழமை, லட்சியம் ஆகிய பண்புகளை கொண்ட இவர்கள் எளிதில் அணுகக் கூடியவர்களாக இருப்பார்கள். வட்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள் தான் நம்பகத்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் சுலபத்தில் இவர்கள் பழகி விடுவதால், வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ள விற்பனையாளர், வாடிக்கையாளர் சேவை மற்றும் பிற வேலைகளை இவர்கள் இயற்கையாகவே திறமையுடன் செய்வார்கள்.

சதுர வடிவம்

சதுர வடிவத்திலான முகத்தை கொண்டவர்கள் முரட்டுத்தனமாக, லட்சியம் மிக்கவர்களாக, ஆளுமையுடன், செயல்பாட்டில் கண்ணாக இருப்பவர்களாக இருப்பார்கள். செயல்பாட்டிலும், முடிவெடுப்பதிலும் இவர்கள் திறமையானவர்களாக இருப்பார்கள். உடல் ரீதியாக திடமாக இருக்கும் இவர்கள், மன அளவிலும் கூட அப்படியே உறுதியுடன் இருப்பார்கள். அவர்களை அவ்வளவு சுலபத்தில் வளைத்து விட முடியாது. மிகவும் பிடிவாதகாரர்களாக இருப்பார்கள். வலுவான தலைமை ஏற்கும் ஆற்றல்களை கொண்டுள்ள இவர்கள் விளையாட்டு வீரராகவும் இருப்பார்கள். ஆனால் எளிதில் கோபப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

தலைகீழ் முக்கோண வடிவம்

தலைகீழ் முக்கோண வடிவத்திலான முகத்தை கொண்டவர்கள் சுறுசுறுப்புடன், ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சகிக்கும் ஆற்றல் குறைவாக இருப்பதால் எளிதில் சோர்வடைந்து விடுவார்கள். இவர்களின் முகத்தில் கலையாற்றல், நம்பிக்கை, படைப்பு, கற்பனை, உணர்ச்சி போன்றவைகள் தென்படும். இவர்களுக்கு கலை உலகில் வெற்றி வாய்ப்பு அதிகம். இவர்கள் மற்றவர்களை ஊக்குவித்து, நல்ல அறிவுரைகளை வழங்குவார்கள். ஆனால் ஒரு கலைஞராக, தலைகீழ் முக்கோண வடிவத்திலான முகத்தை கொண்டவர்கள் கோபக்காரர்களாக இருப்பார்கள். இவர்களால் தொழில் அதிபர்களாக இருக்க முடிவதில்லை.

நீண்ட வடிவம்
நீண்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள் அறிவாளியாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு நல்ல ரசனையும் இருக்கும். நீண்ட மற்றும் ஒல்லியான முகத்தை கொண்டவர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இவ்வகை முகத்தை கொண்டவர்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் விளங்குவார்கள். தன் கனவுகளை நிறைவேற்ற எந்த அளவிலும் முயற்சியை அளிக்க தயங்க மாட்டார்கள். பொதுவாக இவர்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள். ஆனால் கோபம் வந்தால் நிலைமை மோசமாகி விடும். சிந்தித்து செயல்படுவதில் அவர்கள் சிறந்து செயல்படுவார்கள். சமுதாய திறன்களும் அதிகமாக இருக்கும். இவர்களின் உடல் கட்டமைப்பு அருமையாக இருக்கும். தன்னை தானே விரும்புபவர்களாக இருக்கும் இவர்களுக்கு பிறருடான உறவில் பிரச்சனைகள் ஏற்படும்.

Related posts

சுருக்கமில்லா இளமையான அழகு கிடைக்க தினம் ஒரு ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க !!

nathan

அரோமா தெரபி

nathan

இதோ எளிய நிவாரணம்! சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக போக்க இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்!

nathan

முதிர்ந்த வயதிலும் உங்கள் சருமத்தை இளமையுடன் தோன்ற வைக்கலாம்’ என்கிறார் சரும நிபுணர்

nathan

சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்ய…

sangika

அற்புதமான குறைபாடற்ற தோலுக்கான 10 எளிய குறிப்புகள்

nathan

கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!….

sangika

பனிக்காலத்தில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்

nathan

இதோ டிப்ஸ்.!!முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் வீட்டிலேயே பெற.!

nathan