25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 1
சரும பராமரிப்பு

கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்ட வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

பொதுவாக நாம் முகத்திற்கு முக்கியத்துவத்தை கண்களுக்கு கொடுப்பதில்லை. கண்களுக்குக் கீழ் உள்ள சருமம் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக அளவில் கவனிப்புத் தேவைப்படுகிறது.

இல்லாவிடின் விரைவிலேயே வீங்கிய கண்கள், கரு வளையங்கள் மற்றும் சோர்வான கண்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக வரும்.

 

எனவே இவற்றை ஆரம்பத்திலே ஒரு சில பொருட்களை வைத்து நீக்க முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம்.

கரு வளையங்கள்

7 தேக்கரண்டியளவு இனிப்பு பாதாம் எண்ணெய், 5 தேக்கரண்டியளவு ரோஸ்ஷிப் எண்ணெய், 2 வைட்டமின் ஈ மாத்திரை எண்ணெய் எடுத்து பாட்டிலில் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஷேக் செய்து கொள்ளுங்கள்.

 

படுகைக்குச் செல்லும் முன்பு இந்த கலவையை எடுத்து மெதுவாக கண்களைச் சுற்றித் தடவி மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் எழுந்து கழுவுங்கள். இதனை இரண்டு வாரம் தொடர்ந்து செய்வதினால் நல்ல மாற்றத்தினை விரைவில் காணலாம்.

கண்களுக்குக் கீழ் வீக்கம்

1/4 கப் காபி தூள், 1/2 கப் இனிப்பு பாதாம் எண்ணெய், 2 தேக்கரண்டியளவு ஆமணக்கு எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் காபித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலக்குங்கள். இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள்.

பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள்.

 

நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண் கீழ்ப் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.

கண் வீக்கம்

12 சொட்டு ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய், 6 சொட்டு லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய், 6 சொட்டு எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய், 5 மில்லி பாதாம் எண்ணெய் ஆகியவற்றைப் பாட்டிலில் ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்து 2 முதல் 3 மணி நேரம் விட்டு பின்னர் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்யலாம்.

 

சோர்வடைந்த கண்கள்

2 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டியளவு அப்ரிகாட் கர்னல் எண்ணெய் 2 தேக்கரண்டியளவு அவோகேடா எண்ணெய் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுகைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம்.

 

கண் சுருக்கங்கள்

1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப மர அத்தியாவசிய எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.

 

Related posts

மருதாணி வைப்பதால் என்னென்ன நன்மைகள் நடக்கும்னு தெரியுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு உலர்ந்த சருமமா !

nathan

கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை

nathan

சரும சுருக்கத்தை போக்கும் டைட்னிங் பேஷியல்

nathan

மையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

amazing beauty benefits lemon அழகா ஜொலிக்கணுமா? எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.

nathan

பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

கன்னத்தின் அழகு அதிகரிக்க……

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தழும்பை போக்க விட்டமின் ஈ யை எப்படி பயன்படுத்தலாம்?

nathan