26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
fridge
Other News

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஃபிரிட்ஜின் உள்ளே இடத்தை அடைக்காமல் பயன்படுத்துவது எப்படி?

ஃபிரிட்ஜ் பெரியதோ, சிறியதோ அதனுள்ளே பொருட்களை துளியளவும் வீணாகாமல் அடுக்கிப் பராமரித்தால் நிறைய பொருட்களை உள்ளே வைத்து கெடாமல் பாதுகாக்க முடியும்.

எங்க வீட்டு பிரிட்ஜில் இடமேயில்லை. வாங்கும் போதே இன்னும் பெரியதாக வாங்கி இருந்தால் இப்படி கஷ்டப்படத் தேவையில்லை என்று பல பெண்மணிகள் புலம்புவதைக் கேட்க முடியும். நம்முடைய பிரிட்ஜின் இடத்திற்கேற்ப அதனுள்ளே வைக்கக்கூடிய கூடைகள், ட்ரேக்கள், கிண்ணங்கள், பைகள் என பல மாடல்களில் பல அளவுகளில் வந்துவிட்டன. அவற்றை எவ்வாறு நாம் பயன்படுத்தலாம்? பார்க்கலாம்.. வாங்க.

பிரிட்ஜின் கண்ணாடி ரேக்குகளில் தொங்க விடுவதுபோல் பிளாஸ்டிக்கிலான ட்ரேக்கள் வந்து விட்டன. இந்த பிளாஸ்டிக் ட்ரேக்களின் இரண்டு பக்கமும் பிடியானது வளைந்து கண்ணாடி ட்ரேக்களில் மாட்டி பொருத்திக் கொள்வது போல் உள்ளது. இதனால் கண்ணாடி ட்ரேக்களில் ஏதாவது சாமான்களை வைத்தால்கூட இவை அவற்றின் மேல் அடிக்காதவாறு பொருத்திக் கொள்ள முடியும். இவற்றில் காய்கறிகள், பழங்கள் என எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும்.

பொருட்கள் குறைவாக இருக்கும் பொழுது சுருக்கி வைத்தும் பொருட்கள் அதிகமாக இருக்கும் பொழுது விரித்து வைத்தும் பயன்படுத்துவது போல் எக்ஸ்பேன்டபிள் பிளாஸ்டிக் டிரேக்கள் வந்து விட்டன. இவையும் கண்ணாடி ட்ரேக்களில் மாட்டிக் கொள்ளும் மாடல்கள் மட்டுமல்லாது சாதாரணமாகவும் கிடைக்கின்றன.

ஒரே பிளாஸ்டிக் பாக்ஸின் உட்புறம் தனித்தனியாக இரண்டு மூன்று பகுதிகள் இருப்பதுபோல் மூடி மற்றும் கைப்பிடியுடன் வரும் இந்த கம்பார்ட்மெண்ட் ஸ்டோரேஜ் பாக்ஸ்களில் மூன்று விதமான பொருட்களை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைக்க முடியும். அதேபோல் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை பார்க்கும் பொழுதே தெளிவாகத் தெரிவதால் ஒவ்வொரு பாக்ஸையும் திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லாதவாறு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்ள முடியும். இப்படி வைக்கும் பொழுது சமைக்கும் நேரத்தில் நேரமும் மிச்சம். கையாள்வதும் எளிது.

காய்கறிகளை பிரிட்ஜில் கொடுக்கப்பட்டிருக்கும் காய்கறிப் பெட்டியில் வைத்தாலும் தக்காளி மற்றும் பழங்களைத் தனியாகத்தான் வைக்க வேண்டும். இதற்கென்றே பிரிட்ஜினுள் கச்சிதமாக அடங்குவது போல் உறுதியான பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட கூடைகள் வருகின்றன.

அதேபோல் சில பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடியாலான பாத்திரங்களை பிரிட்ஜிற்குள் வைத்து அப்படியே எடுத்து ஓவனில் சூடுபடுத்திக் கொள்வது போல் பாக்ஸ்கள் வந்துள்ளன. இவை வட்ட மற்றும் சதுர வடிவங்களில் பிரிட்ஜினுள் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அடுக்கிக் கொள்வது போல் அட்டகாசமாக வந்துள்ளன.

முட்டைகளை அதிக அளவில் பிரிட்ஜிற்குள் வைத்துக் கொள்வதற்காக வந்திருக்கும் பெட்டிகளில் இரண்டு அடுக்குகளாக முட்டைகளை அடுக்கி வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் ஒரு பெட்டியிலேயே முப்பத்தி இரண்டு முட்டைகள் வரை வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் பத்து முட்டைகள் வரை கூட ஒரே பெட்டியில் கச்சிதமாக வைத்துக் கொள்வது போல் வந்திருப்பவை பார்க்க அழகாக இருக்கின்றன.

இதுபோன்று பெட்டிகள் வைத்தால் இடம் அடைக்கும் என்று நினைப்பவர்கள் உபயோகிப்பதற்கு வசதியாக நெட் ஜிப் பேக்குகள் வந்து விட்டன. இந்த பேக்குகளிலுள்ளே வைக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என எதுவுமே எளிதில் கெடுவதில்லை.

குளிர்பான பாட்டில்கள் மற்றும் டின்களை வைத்துக் கொள்ள வசதியாக வந்திருக்கும் அமைப்பில் சாஸ் பாட்டில்கள், வினிகர் போன்றவற்றை டோர் சைடில் வைத்துக் கொள்வது போல வடிவமைத்து இருக்கிறார்கள்.

பிரிட்ஜின் உட்புறம் மட்டுமல்லாது பிரிட்ஜின் வெளிப்புறம் பேப்பர் டவல் வைப்பதற்கு உண்டான அமைப்பு, ஹகுக் ெஷல்ப், சைடு ட்ரே ரேக், வைட் சைடு பாக்ஸ், க்ரூயெட் ப்ரேம் போன்ற மேக்னடிக் ரெஃப்ரிஜிரேட்டர் ஷெல்ப், ஸ்டோரேஜ் செட்டுகளை பிரிட்ஜின் வெளிப்புறக் கதவு மற்றும் பக்கவாட்டிலும் பொருத்தி பொருள்களை வைத்து உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

பிரிட்ஜின் கதவின் உட்புறம் தொங்கக் கூடிய ஸ்டோரேஜி பைகளில் சாஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மசாலா பாக்கெட்டுகள் போன்றவற்றை வைத்துக் கொள்ள முடியும்.

பிரிட்ஜின் வெளிப்புறம் முக்கியமான குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது போன்ற மேக்னடிக் வெள்ளை ஷீட்டுகளை ஒட்டி வைப்பது போல் வந்திருப்பவை மிகவும் உபயோகமான ஒன்று என்று சொல்லலாம். இவற்றில் எழுதுவதற்கு பல வண்ணங்களில் வரும் மார்க்கர் மற்றும் ரப்பர் இவற்றுடன் செட்டாக வருகின்றன.

பிளாஸ்டிக்கில் சிலிக்கான் அடிப்பாகத்துடன் வரும் ஐஸ் ட்ரேக்கள் மிகவும் உபயோகமான பொருள் என்று சொல்லலாம். இதில் ஒரேஒரு ஐஸ் க்யூபை எடுக்க வேண்டுமென்றால் அதன் சிலிக்கான் அடிப்பாகத்தை அழுத்தி எடுத்துக் கொள்ள முடியும். இந்த ஐஸ் ட்ரேயின் மூடியில் கொடுக்கப்பட்ட தனியாக மூடித் திறக்கும் துளையின் வழியாக மொத்த மூடியையும் திறக்காமலேயே தண்ணீரை ட்ரேயில் ஊற்றும்படி வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொருட்களை கச்சிதமாக வைக்கும் பொழுது அவற்றை பராமரிப்பதும் எளிதாகின்றது.

Related posts

உங்கள் கைவிரல் மூட்டுக்கள் உங்கள் கைகளின் அழகைக் கெடுக்கிறதா? கருமையைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!

nathan

இந்த ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்-மகனை சுசனா சேத் கொன்றது எப்படி?

nathan

“பீரியட்ஸ் நேரத்துல அதை கேப்பாங்க..” வாணி போஜன்..!

nathan

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன்

nathan

லியோ ஒரு குப்பை படம்..! பைசா பெறாது..! – நடிகர் பரபரப்பு

nathan

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழி என்ன?

nathan

சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் நிஜ கணவர் யார்?

nathan

ஷிவானி நாராயணனுக்கு விரைவில் திருமணம்

nathan