உடல் முழுதும் ஒரே சீரான நிறத்தை பெற மேக்கப் பொருட்களை பயன்படுத்துபவரா நீங்கள்? ஆம் என்றால், உங்களுக்கான பதிவு தான் இது. இயற்கையான முறையில் சீரான சரும நிறத்தை பெற ஒரு எளிய வழியை உங்களுக்கு இந்த பதிவு தருகிறது. நாம் இந்த பகுதியில் காணவிருக்கும் அந்த நிவாரண பொருள், எலுமிச்சை சாறு. எலுமிச்சை சாறை பல வழிகளில் பயன்படுத்தி, சரும நிறத்தை பேணிக் காக்கலாம். சருமம் முழுவதும் சீரான நிறத்தை பெற, இயற்கை ப்ளீச் எலுமிச்சையை பல காலங்களாக பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை , சரும நிரமிழப்பு, சரும சேதம் போன்றவற்றை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இந்த இயற்கை பொருளை பல விதங்களில் பயன்படுத்தி சரும நிறத்தை சீராக்கலாம். பொதுவாக, விரைந்து செயல்பட, எலுமிச்சை சாறை , இதனோடு ஒத்த மற்ற பொருட்களோடு சேர்த்து பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
இந்த இயற்கை பொருளை பல விதங்களில் பயன்படுத்தி சரும நிறத்தை சீராக்கலாம். பொதுவாக, விரைந்து செயல்பட, எலுமிச்சை சாறை , இதனோடு ஒத்த மற்ற பொருட்களோடு சேர்த்து பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
எலுமிச்சை சாறு பயன்படுத்தி சரும நிறத்தை சீராக்கலாம்.
சருமத்தின் எல்லா பகுதியிலும் சீரான நிறத்தை பெற, எலுமிச்சை சாறை கொண்டு மாஸ்க் போல் செய்து பயன்படுத்தலாம். எளிதாக செய்யக்கூடிய , விலை குறைவான அதே சமயம் நல்ல பலனை விரைவில் தரக் கூடிய இந்த வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாஸ்க் 1 :
தேவையான பொருட்கள் :
கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது :
மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஓன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாக் கழுவி , சிறிது ஈரபதத்துடன் வைத்துக் கொள்ளவும். இப்போது முகத்தில் இந்த கலவையை தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின்பு சிறிதளவு மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும்.
மாஸ்க் 2 :
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
ஆர்கனிக் தேன் – 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது :
மேலே கூறிய இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும். இந்த மாஸ்கை முகத்தில் எல்லா இடங்களிலும் படும்படி சீராக தடவவும். 15 நிமிடங்கள் நன்றாக காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
மாஸ்க் 3 :
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 ஸ்பூன்
ஆரஞ்சு தோல் பவுடர் – 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது :
மேலே கூறிய எல்லா மூல பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் சமமாக தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின் மென்மையான ஸ்கின் டோனர் பயன்படுத்தவும். இது ஒரு சிறந்த பலனை தரும்.
மாஸ்க் 4 :
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
பன்னீர் – 1/2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது :
அரிசி மாவுடன், பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
மாஸ்க் 5 :
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1/2 ஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு – 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது :
ஒரு கிண்ணத்தில் மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை நன்றாக கழுவிய முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
மாஸ்க் 6 :
தேவையான பொருட்கள் :
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
பப்பாளி விழுது – 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது :
பப்பாளி விழுதுடன் , எலுமிச்சை சாறை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் எல்லா இடத்திலும் சீராக தடவவும். 10 நிமிடம் கழித்து , க்ளென்சர் மற்றும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின்பு முகத்தை துடைத்து, மென்மையான மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும்.
மாஸ்க் 7 :
மாஸ்க் 7 :
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
வைட்டமின் ஈ மாத்திரை – 1
எப்படி பயன்படுத்துவது :
வைட்டமின் ஈ மாத்திரையில் உள்ள எண்ணெய்யை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற மூல பொருட்களை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் மெல்லிய லேயராக தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
மேலே கூறிய முறைகளை முயற்சித்து சருமத்தில் சீரான நிறத்தை பெற எங்கள் வாழ்த்துகள் !