1. சோற்றுக் கற்றாழையை நறுக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து வெயிலில் அலைந்ததால் வந்த முகத்தில் உள்ள தோலின் கருமை நிறம் கண்ட பகுதியின் மேல் லேசாக தேய்த்து வர கருமை நிறம் மாறும். சூரியக் கதிர்களால் உண்டான கொப்புளங்களும் உடன் ஆறும்.
2. சோற்றுக் கற்றாழைச் சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பரவலாகப் படும்படி தேய்த்து வைத்திருந்து 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிட தோல் ஆரோக்கியம் பெறும். தோல் சுருங்கி விரியும் தன்மையைத் தருவதோடு, மென்மையையும் பளபளப்பையும் தருகிறது.
தோலின் செல்களுக்கு போதிய பிராண வாயுவைத் தந்து தோலின் ரத்த காயங்களை நன்கு இயங்கச் செய்கிறது. இதனால் வயதான தோற்றம் தடுக்கப்பட்டு குமரனாகவோ குமரியாகவோ ஒருவரைத் தோன்றச் செய்கிறது.
3. கண்களில் அடிபட்ட தாலோ, கிருமிகளாலோ கண்கள் சிவந்து வீக்கம் கண்டிருந்தால் கற்றாழையை மேல் தோல் சீவி எடுத்து கழுவியபின் ஒரு வில்லை இடது கண் மீதும் இன்னொரு வில்லை வலது கண் மீதும் வைத்து ஒரு துணியால் கட்டிக்கொண்டு இரவு படுத்துவிட காலையில் கண் சிவப்பு மாறி வெண்மை பெற்றிருக்கும், வீக்கமும் தணிந்து இருக்கும். இரண்டொரு நாட்கள் இப்படி தொடர்ந்து செய்வதால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் அகலும்.