29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
noserings
முகப் பராமரிப்பு

இந்தியப் பெண்கள் மூக்குத்தி அணிவதன் முக்கியத்துவம் என்ன?தெரிஞ்சிக்கங்க…

இந்தியாவில் பெண்கள் மூக்குத்தி அணிவது ஒரு சம்பிராதயமாகவே இருந்து வருகிறது. மூக்குத்தி அணிவதன் முக்கியத்துவம் ஒவ்வொரு இடத்திற்கும் வேறுபடுகிறது. இந்து மதத்திலுள்ள பெரும்பாலான பெண்கள், திருமணத்தின் போது தங்கள் கழுத்தில் தாலி கட்டுவதைப் போல் மூக்கில் மூக்குத்தியும் அணிந்து கொள்கிறார்கள். ஆனாலும், சில இனத்தினர் மூக்குத்தி அணிவதைக் கட்டாயம் என்று கருதுவதில்லை. அவர்களில் திருமணமாகாத பெண்களும் மூக்குத்தி அணிந்து கொள்கின்றனர்.

தற்காலத்தில், மூக்குத்தி அணிந்து கொள்வது ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. பலவிதமான டிசைன்களிலும், வண்ணங்களிலும் கிடைக்கும் மூக்குத்திகளை அணிந்திருக்கும் பெண்களின் அழகே தனிதான்! இந்தியப் பெண்கள் ஏன் மூக்குத்தி அணிந்து கொள்கிறார்கள் என்பது குறித்துக் கொஞ்சம் அலசுவோமா?

எப்படி தோன்றியது?

நம் கலாச்சாரத்தில் மூக்குத்தி அணியும் பழக்கம் எப்போது, எவ்வாறு, ஏன் தோன்றியது என்பது குறித்துப் பலரும் பலவிதக் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் மத்தியக் கிழக்கு நாடுகளில் தோன்றியதாகவும், கடந்த 16ம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசின் போது இந்தப் பழக்கம் நம் நாட்டிற்குள் ஊடுருவியதாகவும் கூறப்படுகிறது.

எவ்வளவு நம்பிக்கைகளும், கதைகளும் கூறப்பட்டாலும், பெரும்பாலான இந்தியப் பெண்கள் மூக்குத்தி அணிவது இந்தியக் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது என்றே கூறலாம். மேலும், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று பழங்கால ஆயுர்வேத மற்றும் சுஷ்ருத சம்ஹிதா மருத்துவ முறைகளிலும் கூறப்பட்டுள்ளன.

உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!

மூக்குத் துவாரங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதால், அவர்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலி குறைவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மேலும், இடது மூக்குத் துவாரத்தில் உள்ள சில நரம்புகளுக்கும் பெண் இனப்பெருக்க உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதால், இடது மூக்கில் மூக்குக் குத்திக் கொள்ளும் பெண்களுக்கு பிரசவம் மிகவும் எளிதாக இருக்குமாம்!

மத சம்பிரதாயம்

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் திருமணமான பெண்களின் அடையாளமாகவே மூக்குத்தி கருதப்படுகிறது. திருமண வயதான 16 வயதை அடையும் ஒரு இந்துப் பெண் கட்டாயம் மூக்குத்தி அணிந்து கொண்டு, தன் கணவர் இறந்ததும் தாலியுடன் மூக்குத்தியையும் களைந்து விடுவாளாம்! பெண் கடவுளான பார்வதி தேவியைக் கவுரவிக்கும் விதமாகவும் இந்தியப் பெண்கள் மூக்குத்தி அணிகிறார்களாம்!!

மூட நம்பிக்கையே!

யார், எவ்வளவு தான் கூறினாலும், மூக்குத்தி அணிவது ஒரு மூட நம்பிக்கையே என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இந்த மூட நம்பிக்கை தலை தூக்கியுள்ளதாம். அதன்படி, மூக்குத்தி அணிந்துள்ள பெண் வெளிவிடும் சுவாசக் காற்று அவளுடைய கணவனின் உடல் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்குமாம்!

Related posts

பெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு!

nathan

தெரிஞ்சிக்கங்க… கரும்புள்ளிகள் முதல் பருக்கள் வரை, உடனே தீர்வுக்கு கொண்டு வர #நச்சுனு 7 டிப்ஸ்..!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தலை முதல் கால் வரையிலான அழகை மெருகேற்றலாமே

nathan

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்ய!…

nathan

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தர இதை செய்து வாருங்கள்……

sangika

லெமன் டீயில் முகம் கழுவினால் நடக்கும் மேஜிக் என்னவென்று தெரியுமா?

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan

ஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கான தீர்வு! இளமையான முகத்திற்கு காபி பவுடர் பேஸ் பேக்

nathan