26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 sex kiss love
Other News

உங்களுக்கு தெரியுமா தினமும் 5 நிமிடம் லிப்-கிஸ் கொடுப்பதால் பெறும் அற்புத நன்மைகள்!

முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஓர் வழி. பெற்றோர்கள், நண்பர்கள் போன்றவர்களுக்கு கன்னங்கள், நெற்றி, கைகளில் முத்தத்தைக் கொடுப்போம். நம் மனதிற்கு நெருக்கமான மற்றும் வாழ்க்கை துணையாக வருபவர்களுக்கு அன்பின் உச்சக்கட்டமாக உதட்டோடு உதடு முத்தம் கொடுப்போம். சொல்லப்போனால் முத்தம் ஒரு நல்ல உணர்வைக் கொடுப்பதோடு, நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது தெரியுமா?

Top Biological Benefits Of Kiss On The Lips
அதுவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம். இக்கட்டுரையில் அதுக் குறித்து தான் பார்க்கப் போகிறோம். அதைப் படித்து அந்த நன்மைகளைத் தெரிந்து கொண்டு, இனி தினமும் உங்கள் துணைக்கு லிப்கிஸ் கொடுத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

எச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும்

முத்தம் கொடுப்பதால் பெறும் நன்மைகளுள் முதன்மையானது ஒருவரை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும். எப்படியெனில் அடிக்கடி முத்தம் கொடுக்கும் போது, உடலில் நோர்அட்ரினலின் மற்றும் அட்ரினலின் வெளியீடு ஊக்குவிக்கப்பட்டு, இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து, மிகவும் உற்சாகமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கச் செய்யும்.

நுரையீரல் ஆரோக்கியம்

முத்தம் கொடுத்த பின், நாம் வேகமாக சுவாசிப்போம். சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசித்தால், முத்தம் கொடுத்த பின்பு ஒரு நிமிடத்திற்கு 60 முறை சுவாசிப்போம். நாம் அதிகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதன் மூலம், நுரையீரல் சம்பந்தமாக பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், தினமும் உங்கள் துணைக்கு லிப் கிஸ் கொடுங்கள்.

உறவு திருப்தி மேம்படும்

முத்தம் கொடுப்பதால் பெறும் நன்மைகளுள் ஒன்று, இது உங்கள் உறவு திருப்தியை மேம்படுத்தும். அதிலும் ரொமான்டிக்காக லிப் கிஸ் கொடுக்கும் போது, துணையுடனான பிணைப்பு வலுவடைந்து, உங்கள் உறவு திருப்திகரமாக இருக்கும். எனவே உங்கள் உறவை வலுவாக்க நினைத்தால், அடிக்கடி உங்கள் துணைக்கு லிப்கிஸ் கொடுங்கள்.

துணையை நன்கு உணர உதவும்

அடிக்கடி முத்தம் கொடுப்பது துணையை நன்கு உணர உதவுவதோடு, துணையுடனான நெருக்கத்தையும் அதிகரிக்கும். முத்தம் கொடுக்கும் போது, மூளையில் ஆக்ஸிடோசின் அளவு அதிகரித்து, மன அமைதியடைவதோடு, துணையின் மீதான நம்பிக்கையும், நெருக்கமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வாழ்நாள் நீடிக்கும்
உங்கள் வாழ்நாள் நீட்டிக்க வேண்டுமா? அப்படியானால் அடிக்கடி உங்கள் துணைக்கு முத்தம் கொடுங்கள். தினமும் காலையில் துணைக்கு முத்தம் கொடுப்பதால், முத்தம் கொடுக்காதவர்களை விட 5 வருடம் அதிகமாக வாழ்வதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக முத்தத்தின் இந்த நன்மை பெண்களுக்கு இல்லை. ஆண்கள் தினமும் காலையில் துணைக்கு முத்தம் கொடுத்து வந்தால், உணர்வு ரீதியாக உறவு மேம்பட்டு, வாழ்நாளும் நீடிக்கும்.

சுயமரியாதை மேம்படும்

முத்தம் ஒருவரது சுயமரியாதையை மேம்படுத்த உதவும். ஆண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது துணைக்கு லிப் கிஸ் கொடுத்து சென்றால், அவர்கள் ஊக்கமுள்ளவர்களாகவும், அதிக பணம் சம்பாதிக்கக்கூடியவராகவும் உணர வைப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது முத்தம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை மிகச்சிறந்த ஒன்று எனக் கூறலாம்.

பாலியல் இணக்கம் தூண்டப்படும்

முத்தம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று தான் இது. தம்பதியர்கள் உறவில் ஈடுபடும் முன்பு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால், அவர்களின் பாலியல் உணர்வு சிறப்பாக தூண்டப்பட்டு, உறவில் சிறப்பாக ஈடுபடச் செய்யுமாம். ஏனெனில் முத்தம் கொடுக்கும் போது, ஆண் மற்றும் பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் செக்ஸ் ஹார்மோன்களின் வெளிப்பாடு அதிகம் இருக்குமாம்.

வெள்ளையான பற்கள்

முத்தம் கொடுப்பதால் கிடைக்கும் மற்றொரு நன்மை, பற்கள் வெள்ளையாகும். ஆய்வுகளின் படி, முத்தம் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துமாம். அதுவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போது வாயில் உற்பத்தி செய்யப்படும் எச்சில், பாக்டீரியாக்களின் பெருக்கத்தைத் தடுத்து அழிக்குமாம். இதனால் பல் சொத்தை மற்றும் பற்காறை ஏற்படுவது கூட தடுக்கப்படுமாம். எனவே உங்கள் பற்களை வெள்ளையாக்க நினைத்தால், தினமும் லிப்கிஸ் கொடுங்கள்.

மனஅழுத்த நிவாரணி

லிப் கிஸ் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளுள் முக்கியமானது, தற்போது பலரும் சந்திக்கும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்பது தான். முத்தம் கொடுக்கும் போது உடலில் கார்டிசோல் அளவு குறைந்து, மனம் ரிலாக்ஸாக இருக்கும். மேலும் முத்தம் மன கவலையில் இருந்து விடுவிக்கும். அதோடு டோபமைன் என்னும் சந்தோஷமான மனநிலையில் வைக்கும் ஹார்மோனின் அளவை மேம்படுத்தி, நல்ல அமைதியான மனநிலையில் இருக்க உதவும்.

கலோரிகள் எரிக்கப்படும்

இது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். லிப்கிஸ் கொடுத்தால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் ஒருவர் 1 நிமிடம் லிப்கிஸ் கொடுத்தால், 2-3 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் முத்தம் கொடுத்துக் கொண்டே, உடலுறவில் ஈடுபட்டால், அது கடுமையான உடற்பயிற்சி செய்ததற்கு சமம். இம்மாதிரியான நேரத்தில் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, அதிகளவு கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையும் குறையும். ஆகவே எடையைக் குறைக்க நினைத்தால், தினமும் துணைக்கு சிறிது நேரம் லிப்கிஸ் கொடுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

முத்தம் கொடுப்பதால் கிடைக்கும் மற்றொரு நன்மை, இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். முக்கியமாக முத்தம் கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, பிறப்பு குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும். உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை எளிதில் வலிமையாக்க நினைத்தால், சிறிது நேர்ம் உங்கள் துணைக்கு லிப்கிஸ் கொடுங்கள்.

அலர்ஜிகள் குணமாகும்

முத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, அலர்ஜியையும் குணமாக்கும். முத்தம் கொடுக்கும் போது, அது ஹிஸ்டமைன் வெளியீட்டிற்கு காரணமான ஆன்டிபாடிகளின் அளவைக் குறைக்கும். உடலில் ஹிஸ்டமைன் அதிகம் வெளியிடப்பட்டால், அதனால் அலர்ஜிக்குரிய அறிகுறிகளான கண்களில் இருந்து நீர் வடிதல் மற்றும் தும்மல் போன்றவற்றை உண்டாக்கும். எனவே அதிகமாக முத்தம் கொடுத்தால், அலர்ஜியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

வலி நிவாரணி

முத்தம் கொடுப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளுள் ஒன்று, இது நல்ல வலி நிவாரணியாக இருக்கும். அதுவும் முதுகு வலி, தலைவலி மற்றும் மாதவிடாய் கால வலி அல்லது பிடிப்புக்களில் இருந்து விடுவிக்கும். முதுகு வலியால் அவஸ்தைப்படும் போது, உங்கள் துணைக்கு சிறிது நேரம் லிப் கிஸ் கொடுங்கள். இதனால் வலி குறைவதைக் காணலாம். இதற்கு காரணம், முத்தம் கொடுக்கும் போது எண்டோர்பின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படுவதே ஆகும்.

இதய ஆரோக்கியம்

முத்தம் ஒருவரது இதய ஆரோக்கியத்தை இயற்கையாகவே மேம்படுத்தும். முத்தம் கொடுக்கும் போது, உணர்வுகள் தூண்டப்படுவதால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் குறைவான அளவில் இருப்பதே இதய ஆரோக்கியத்திற்கு காரணம். ஆய்வு ஒன்றில் திருமணமான தம்பதிகள் அடிக்கடி உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதால் தான், அவர்கள் மன அழுத்தமின்றி, கொலஸ்ட்ரால் பிரச்சனையின்றி இருப்பதாக தெரிய வந்தது. மேலும் முத்தம் ஆரோக்கியமான இதய துடிப்பிற்கு உதவுவதோடு, இரத்த நாளங்களை தளரச் செய்து, உடல் முழுவதும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.

Related posts

எம்.ஜி.ஆர் பட நடிகைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

nathan

இந்த ராசிக்காரங்கள மக்கள் எப்பவும் தப்பாதான் புரிஞ்சிக்கிறாங்களாம்…

nathan

சேலையில் கிளாமராக வந்த ஆலியா பட்

nathan

யூடியூப் சேனலில் கலக்கும் திருவண்ணாமலை ஜோடி!

nathan

எனக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அதுதான் – நடிகர் விஜய்!

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு அவங்க காலேஜ் லவ்வரையே கல்யாணம் பண்ணிக்கும் அதிர்ஷ்டமிருக்காம்..

nathan

பரபரப்பாக நடந்த திருமணம் : காரில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்!!

nathan

மனைவியின் பிறந்தநாளில் பிறந்த குழந்தை – நடிகர் யுவராஜ் போட்ட பதிவு

nathan

மெத்தைக்கு பதில் சவப்பெட்டிக்குள் படுக்கும் இளம்பெண்…

nathan