அறுசுவைஇனிப்பு வகைகள்

தீபாவளி ரெசிபி ஜாங்கிரி

images (6)வையான ஜாங்கிரி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.

தேவையான பொருட்கள்

  • உளுத்தம் பருப்பு – 1 கப்
  • அரிசி – 1 மேசைக்கரண்டி
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • தண்ணீர் – 1 கப்
  • கேசரி கலர்(சிகப்பு (அ) ஆரஞ்ச் – 2 பின்ச்
  • ரோஸ் எஸ்ஸன்ஸ் – 2 தேக்கரண்டி

செய்முறை

  1. அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதற்கு மேலும் ஊற வைத்தால் பொரிக்கும் போது ஜாங்கிரி அதிக எண்ணெய் குடித்து விடும்.
  2. அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் மிருதுவாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும். மாவு அரைப்பதற்கு 1/4 கப் தண்ணீர் போதுமானதாக இருக்கும்.
  3. அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு பின்ச் கேசரி கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. மாவு சரியாக அரைத்துள்ளதை அறிய தண்ணீரில் சிறிது மாவை வைத்தால் மாவு மிதக்க வேண்டும்.
  5. சர்க்கரை பாகு தயாரிக்க
  6. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர்(சர்க்கரை மூழ்கும் அளவு) கலந்து கொதிக்க விடவும். இளம் பாகு பதம் வந்தவுடன் கேசரி கலர் மற்றும் ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  7. ஒரு தட்டையான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். மிகவும் குறைவாக(1 இன்ச்) போதுமானது. எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.
  8. ஒரு சுத்தமான துணி அல்லது ஜிப்லாக் கவரில்(திக்கான பாலிதீன் பை) எடுத்துக் கொண்டு அதில் சிறிய ஓட்டை போடவும்(ஒரு கம்பியை லேசாக சூடு செய்து ஓட்டை போடவும்).
  9. பின் அதில் மாவை நிரப்பி சிறு ஜாங்கிரியாக வேண்டுமெனில் சிறு வட்டங்களாக இரண்டு வட்டங்கள் வருமாறு சுற்றி விடவும்.
  10. பெரிதாக வேண்டுமெனில் இரண்டு பெரிய வட்டங்களாக சுற்றி, பின் அதன் மேலே சுருள் சுருளாக சுற்றிலும் பிழிந்து விடவும்.
  11. ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு வேக விடவும்.
  12. ஜாங்கிரி வெந்தவுடன் அதை கவனமாக எடுத்து சர்க்கரை பாகில் போடவும்(2 நிமிடங்கள்).
  13. அடுத்து ஜாங்கிரி பொரித்து வரும் வரை சர்க்கரை பாகில் ஊற விட்டு, பின் எடுத்து தட்டில் அடுக்கி விடவும். இதை அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடவும்.
  14. சுவையான ஜாங்கிரி தயார்.

Related posts

கருவாட்டு ப்ரை(Karuvadu Fry)

nathan

சுவையான பானி பூரி

nathan

எப்படி சுறா புட்டு செய்வது?

nathan

சுவையான ரவா கேசரி செய்முறை விளக்கம்.

nathan

கடலை உருண்டை

nathan

சூப்பரான கரும்புச்சாறு பொங்கல்!….

sangika

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

ரம்ஜான் ஸ்பெஷல்: அராபிய சிறப்பு இனிப்பு வகைகள்

nathan