26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
11 1436607084 potato mutton curry
அசைவ வகைகள்

பேச்சுலர்களுக்கான… உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு

மட்டன் குழம்பு செய்யும் போது அத்துடன் உருளைக்கிழங்கு போட்டு சமைத்தால், குழம்பின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு, குழம்பும் நல்ல மணத்துடன் இருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரியாதா? இங்கு இந்த ரெசிபியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விடுமுறை நாட்களில் பேச்சுலர்கள் தங்கள் வீடுகளில் செய்து சாப்பிடலாம். அந்த அளவில் மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு மட்டன் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!

11 1436607084 potato mutton curry

மட்டன் – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அதில் மட்டனை போட்டு 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் தயிர் ஊற்றி கிளறி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து, மீண்டும் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனப் பின் குக்கரை திறந்து கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு ரெடி!!!

Related posts

சில்லி சிக்கன் கிரேவி

nathan

இறால் பஜ்ஜி

nathan

சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்

nathan

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

nathan

மீன் பிரியாணி

nathan

சிம்பிளான… சீஸ் மக்ரோனி

nathan

சுவையான ஹரியாலி முட்டை கிரேவி

nathan

முட்டை மிளகு மசாலா : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான கருவாடு பிரட்டல்… நாள் செல்ல செல்ல அதிகரிக்கும் சுவை!

nathan