25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11 1449810168 2 alover1 1
தலைமுடி சிகிச்சை

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகுத் தொல்லையை விரட்டுவது எப்படி?

பொடுகு என்பது பூஞ்சை தொற்றினால் ஏற்படுவது. இது ஸ்கால்ப்பில் கடுமையான அரிப்பையும், வறட்சியையும் ஏற்படுத்தும். இந்த பொடுகுத் தொல்லையால் நிறைய மக்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அளவுக்கு அதிகமான பொடுகு தலையில் இருந்தால், அதனால் முடி உதிர ஆரம்பிக்கும். எனவே பொடுகைப் போக்க நம்மில் பலரும் கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது.

எப்போதுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் முதலில் இயற்கை வழிகளைப் பின்பற்ற முயலுங்கள். இதனால் அந்த பிரச்சனை நிரந்தரமாக குணமாவதோடு, ஆரோக்கியமும் மேம்படும். பொடுகைப் போக்க ஏராளமான பொருட்கள் நம் வீட்டிலேயே உள்ளது. குறிப்பாக கற்றாழை அனைவரது வீட்டிலும் இருக்கும் ஓர் செடி.

இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல் பொடுகைப் போக்குவதில் சிறந்தது. இங்கு பொடுகைப் போக்க கற்றாழை ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து பலன் பெறுங்கள்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லுக்கு பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் தன்மை உள்ளது. எனவே அந்த கற்றாழை ஜெல்லை இரவில் படுக்கும் போது நேரடியாக ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தா பொடுகு நீங்கி, முடி உதிர்வதும் குறையும்.

கற்றாழை மற்றும் டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளதால், அது பொடுகைப் போக்க உதவும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லில், 5-6 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது தடவி, மறுநாள் காலையில் அலச வேண்டும்.

கற்றாழை மற்றும் வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை வெளியேற்றும். எனவே 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 9-10 துளிகள் வேப்ப எண்ணெயை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், விரைவில் பொடுகைப் போக்கலாம்.

கற்றாழை மற்றும் கற்பூரம் கற்பூரம்

பொடுகினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்கி, குளிர்ச்சியைத் தரும். மேலும் கற்றாழை வறட்சியைப் போக்கும். ஆகவே 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1/2 ஸ்பூன் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் தன்மை, பொடுகை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து, ஸ்கால்ப்பின் pH அளவை சீராக வைத்துக் கொள்ளும். அத்தகைய எலுமிச்சையை கற்றாழையுடன் சேர்த்து ஹேர் மாஸ்க் போட்டால், பொடுகு விரைவில் போய்விடும். எனவே ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
11 1449810168 2 alover1 1

Related posts

உங்க முடி வேகமாக நீளமா வளர… உங்க சமையலறையில் இருக்க ‘இந்த’ பொருட்களே போதுமாம்…!

nathan

தலைக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

முடி கொட்டுவது நிற்க

nathan

கூந்தலில் நுரை வந்ததும், அழுக்கு நீங்கிவிட்டதாக எண்ணி முடியினை அலசி விடுகிறோம்

nathan

உங்கள் சருமம் மற்றும் முடியை இயற்கையாக பாதுகாப்பது எப்படி!

nathan

25 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் முடி உதிர்கிறது தெரியுமா?

nathan

இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா? அப்ப இத படியுங்க….இனி அந்த கவலை எதுக்கு?

nathan

சூப்பர் டிப்ஸ் பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

nathan

உங்களுக்கு தெரியுமா சீயக்காய் பொடியை எவ்வாறு வீட்டிலேயே தயாரிப்பது…!

nathan