26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
20 1432107125 srirangam vatha kulambu
சைவம்

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஸ்ரீரங்கம் ஸ்டைலில் செய்து சுவைத்தால், மிகவும் அற்புதமாக இருக்கும். ஏனெனில் ஐயர் வீடுகளில் வத்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும்.

இங்கு ஸ்ரீரங்கம் வத்த குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து தான் பாருங்களேன்…


20 1432107125 srirangam vatha kulambu
சுண்டக்காய் – 1 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
புளி – 75 கிராம் (சாறு எடுத்துக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 10
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!

Related posts

சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்

nathan

முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

மொச்சை தேங்காய்ப்பால் பிரியாணி

nathan

சத்தான பட்டர் பீன்ஸ் – கேரட் பொரியல்

nathan

கூட்டுக்கறி

nathan

சேப்பங்கிழங்கு ப்ரை

nathan

விதம் விதமான வெஜிட்டேரியன் கிரேவி

nathan

கேரளா பருப்பு குழம்பு

nathan