25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 1479797319 4 oatmealandcurdfacemask
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். என்ன இயற்கை முறைகள் என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, முகத்தை கழுவுதல், ஃபேஸ் பேக் போடுதல், நிறைய தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல் என்று பல உள்ளன. அதுமட்டுமின்றி, சருமம் கருப்பாக மாறக்கூடாதெனில், ஒருசில செயல்களை தினமும் செய்து வர வேண்டும். அத்தகைய செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஒரு நல்ல பலனைப் பெறலாம். அதிலும் இத்தகைய செயல்களை பின்பற்றினால், 7 நாட்களிலேயே ஒரு நல்ல வித்தியாசம் சருமத்தில் தெரியும். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!

முகத்தை கழுவுதல்

முகம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், தினமும் முகத்தைக் கழுவுவது என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால், முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.

ஃபேஸ் பேக்

முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.

பழங்கள்

பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு, சருமத்திற்கு தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தொப்பி அணியவும்

வெளியே சுற்றும் போது, தலைக்கு தொப்பி போட்டு செல்ல வேண்டும். இதனால் முகத்தில் சூரியக்கதிர்கள் நேரடியாக படுவதை தவிர்க்கலாம்.

தயிர் மசாஜ்

தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.

கிளின்சிங்

கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

தண்ணீர் குடிக்கவும்

தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

உடற்பயிற்சி

முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டுமெனில், மேற்கூறியவற்றுடன் தினமும் காலையில் எழுந்து லேசான உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.
22 1479797319 4 oatmealandcurdfacemask

Related posts

சுப்ரர் டிப்ஸ்! சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க செய்யும் “ஆப்பிள்”

nathan

உங்களுக்கு தெரியுமா பாலுடன் பூண்டை இப்படி கலந்துகுடித்தால் போதும்.. உங்களுக்கு நோயே வராதாம்!

nathan

வெண்ணெய்யை பயன்படுத்தி பாருங்க…!! சருமம் பொலிவுடன் இருக்க

nathan

நீங்கள் முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..?இதை படிங்க…

nathan

உங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்!…

nathan

காதலர் தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆதி நிக்கி ஜோடி

nathan

த்ரெட்டிங் செய்த பின் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை

nathan

அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு. நுரையீரல் பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியவை.!

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

nathan