28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
04 green peas masala
சைவம்

சூப்பரான பச்சை பட்டாணி மசாலா

தற்போது நிறைய பேர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பதால், பெரும்பாலும் சப்பாதியைத் தான் இரவு நேரத்தில் சாப்பிடுவார்கள். அப்படி சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக ஸ்பெஷலாக ஏதேனும் செய்து சாப்பிட நினைத்தால், பச்சை பட்டாணி மசாலாவை ட்ரை செய்யுங்கள்.

இந்த பச்சை பட்டாணி மசாலாவானது அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருப்பதுடன், வாய்க்கு விருந்து அளித்தவாறு மிகவும் சுவையாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த பச்சை பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Green Peas Masala
தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
சன்னா மசாலா பொடி – 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு…

தக்காளி – 4
வெங்காயம் – 2
இஞ்சி – 1/4 இன்ச்
பூண்டு – 5 பற்கள்
பச்சை மிளகாய் – 2

அரைப்பதற்கு…

முந்திரி – 5
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

கிராம்பு – 2
பட்டை – 1/4 இன்ச்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பச்சை பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் முந்திரியை மிக்ஸியில் போட்டு, தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ‘வதக்கி அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி, இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் சன்னா மசாலா பொடி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறி, பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பச்சை பட்டாணி மசாலா ரெடி!!!

Related posts

மோர்க் குழம்பு

nathan

அபர்ஜின் பேக்

nathan

தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

ருசியான… அவரைக்காய் சாம்பார்

nathan

சுவை மிகுந்த பாலக் பன்னீர் கிரேவி…

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan

சுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan