23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
couples problem
Other News

கணவன் மனைவிக்கு இடையே தினமும் சண்டை வருதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

கணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவது என்பது சாதாரணம் தான். ஆனால் ஒருவரது நிம்மதியைக் குலைக்கும் வகையில் சண்டையானது தினமும் வந்தால், அது நிச்சயம் உறவை முறித்துவிடும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், குடும்பத்தில் எதிர்மறை ஆற்றல் பரவ ஆரம்பிக்கும். இதன் விளைவாக வீட்டில் கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள், விவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படும். இப்படி வீட்டில் நடக்கும் தேவையற்ற சண்டையைத் தடுக்க சில வாஸ்து குறிப்புகள் உள்ளன.

உங்கள் வீட்டிலும் இப்படி அடிக்கடி சண்டை வருகிறதா? அப்படியென்றால் உங்கள் வீட்டிலும் வாஸ்து குறைபாடுகள் இருக்கிறது என்று அர்த்தம். இந்த வாஸ்து குறைபாடுகளை நீக்க 7 வழிகள் உள்ளன. அந்த ஏழு வழிகளை செய்வதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கும் மற்றும் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் நீடிக்கும். இப்போது அந்த ஏழு வழிகள் என்னவென்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

விளக்கேற்றவும்

வாஸ்து தோஷம் காரணமாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவியிருந்தால், அதை நீக்குவதற்கு வீட்டில் தினமும் தவறாமல் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி கடவுளை வழிபடுங்கள். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, வீடு ஒரு சந்தோஷம் நிறைந்த அமைதியான சொர்க்கமாக இருக்கும்.

துளசி செடி

உங்கள் வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே தினமும் தகராறு ஏற்படுகிறதா? அப்படியானால் புனித செடியாக கருதப்படும் துளசியை வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் வைத்து வளர்த்து வாருங்கள். அதோடு காலையிலும், மாலையிலும், துளசி செடிக்கு கீழே ஒரு நெய் விளக்கேற்றி வையுங்கள்.

முன்புற வாசல்

உங்கள் வீட்டில் இரண்டு வாசல்கள் இருக்கிறதா? அப்படியானால் எப்போதும் வீட்டின் முன்புற நுழைவாயிலின் வழியே வீட்டிற்குள் வாருங்கள். பின்புற நுழைவாயின் வழியே செல்வதைத் தவிர்த்திடுங்கள். இதனால் கூட வீட்டின் சூழல் அமைதியிழந்து இருக்கலாம்.

கங்கை நீர்

இந்து வேதங்களின் படி, பௌர்ணமி நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாள் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. எனவே பௌர்ணமி நாளில் கங்கை நீரை வீடு முழுவதும் தெளித்துவிடுங்கள். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நீங்கும்.

உப்பு நீர்

உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் முற்றிலும் நீங்க வேண்டுமானால், உப்பு கலந்த நீரால் வீட்டைத் துடையுங்கள். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தி வெளியேறுவதோடு, வீட்டு தரையில் உள்ள பாக்டீரியாக்களும் அழிக்கப்படும்.

சிரிக்கும் புத்தர் சிலை

ஃபெங் சூயி படி, வீட்டில் சிரிக்கும் புத்தர் வைத்திருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமும், அமைதியும் இருக்கும் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. எனவே உங்கள் வீடு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்க வேண்டுமானால், சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கி வையுங்கள்.

செம்பு ஆமை

ஒரு ஜாடி நீரில் செம்பு அல்லது பித்தளை ஆமையை வைத்து, வீட்டின் வடக்கு திசையில் வையுங்கள். இது வீட்டில் உள்ள பல பிரச்சனைகளை நீக்கும் மற்றும் உங்கள் வீட்டில் பணமும் அதிகம் சேரும்.

Related posts

நான்காவது காதலா?வனிதா அளித்த பகிர் பேட்டி !

nathan

தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

nathan

சூப்பர் ஸ்டார்னா என் அண்ணன் மட்டும் தான் – கேப்டன் நினைவேந்தலில் கருணாஸ் பேச்சு

nathan

சனி பகவான் பாடாய்படுத்தப் போகிறார்.. எச்சரிக்கை

nathan

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்..!

nathan

கணவருடன் உடலுறவின் போது இது ரொம்ப ரொம்ப முக்கியம்..

nathan

அம்மாடியோவ்! பொம்பளையா அவ,சூரரைப்போற்று பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தயாரிப்பாளர்! என்ன படம் சார் அது..

nathan

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

nathan

விவசாயி ஆகி காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் பேராசிரியர்

nathan