25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
02 1435823298 karaikudi kozhi kuzhambu
அசைவ வகைகள்

காரைக்குடி கோழி குழம்பு

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி கோழி குழம்பை சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். அதில் காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு அந்த காரைக்குடி கோழி குழம்பை எப்படி சமைப்பதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி கோழி குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

<
02 1435823298 karaikudi kozhi kuzhambu
தேவையான பொருட்கள்:

கோழி – 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்)
தக்காளி – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

அரைப்பதற்கு…

தேங்காய் – 1/2 மூடி
கசகசா – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.

சிக்கனானது ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்து, பச்சை வாசனை போன பின் வாணலியை இறக்கிவிட்டு, பின் தாளிப்பற்கு சிறு வாணலியை அடுப்பில் வைக்க வேண்டும்.

பிறகு அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவினால், காரைக்குடி கோழி குழம்பு ரெடி!!!

Related posts

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

இறால் வறுவல்

nathan

பேக்ட் சிக்கன் : செய்முறைகளுடன்…!​

nathan

சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்

nathan

இதை முயன்று பாருங்கள்… மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..

nathan

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு

nathan

ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி)

nathan

காலிஃப்ளவர் முட்டை பொரியல்

nathan