33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு
அசைவ வகைகள்

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு

27 1435402293 crabcurry

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு சுவைத்ததுண்டா? ஆம், செட்டிநாடு ரெசிபிக்களில் நண்டு குழம்பும் உள்ளது. இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும். அதுமட்டுமின்றி, நண்டு மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

எனவே விடுமுறை நாட்களில் இதனை தவறாமல் செய்து சுவைத்துப் பாருங்கள். சரி, இப்போது செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

நண்டு – 1/2 கிலோ
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
மிளகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!!!

Related posts

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய

nathan

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan

சுவையான முட்டை கறி செய்ய !!

nathan

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan

தந்தூரி சிக்கன்

nathan

மசாலா மீன் வறுவல்

nathan

சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு

nathan

காடை வறுவல் செய்முறை விளக்கம்

nathan

சுவையான முட்டை பட்டர் மசாலா

nathan